IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 68 லட்ச ரூபாய் வழங்கியது எல்விபி

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ்நாட்டின் பழமையான தனியார் வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி மொத்தமாக68,15,000/- ரூபாய் (அறுபத்தெட்டு லட்சம் பதினைந்தாயிரம் மட்டும்)பங்களிப்பை, உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக போராட உருவாக்கப்பட்ட பிரதமரின் ‘பிஎம்கேர்ஸ்’ நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது லட்சுமி விலாஸ் வங்கியின் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை பங்களிப்பாக வழங்கியதன் மூலம் இந்த நிதியை வழங்கியிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், சுமார் 4000-க்கும் அதிகமான ஊழியர்கள் ஒன்றிணைந்து தங்களது பங்களிப்பை வழங்கி இருக்கின்றனர். பிரதமரின் ‘PM CARES Fund’மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான இந்தபங்களிப்பு, கோவிட்-19-க்கு எதிரான ஒரு ஒன்றிணைந்த போராட்டமாகவும், வைரஸ் பரவலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader