IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஸ்நைடர் நிறுவன ஒப்பந்தத்தை பூர்த்தி செய்த எல் அண்ட் டி நிறுவனம்

Get real time updates directly on you device, subscribe now.

எல் அண்ட் டி நிறுவனம், மின் மற்றும் தானியங்கி எந்திரயமாக்கல் தொழில் வணிகப் பணிகளை ஸ்நைடர் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்துள்ளது.

எல் அண்ட் டி நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மதிப்பு கூட்டும் செயல்பாட்டு யுக்தியாக இந்தநடவடிக்கை அமைந்திருக்கிறது.

இந்தியாவின் முன்னணி பொறியியல், தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் நிதிச் சேவை நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி), தனது மின் மற்றும் தானியங்கி எந்திரமயமாக்கல் ((Electrical & Automation – L&T E&A)துணை வணிகத்தை,செயல்பாட்டுயுக்தி ரீதியாக எரிசக்தி மேலாண்மை மற்றும் ஆட்டோமேஷனில் உலகளாவிய நிறுவனமாக விளங்கும் ஸ்நைடர் எலக்ட்ரிக் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது.

Its exit from the Electrical & Automation Business is a part of the strategic portfolio review process.

மே 2018-ல் அறிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க மற்றும் சிக்கலான செயல்பாடு கையகப்படுத்துதல் ஒப்பந்தம் தொடர்பாக தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்று தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சிக்கான மதிப்பை உயர்த்தும் எல் & டி நிறுவனத்தின் குறிக்கோளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. எல் & டி தொடர்ந்து தனது வணிகப் பிரிவுகளை மதிப்பீடு செய்து நீண்ட கால நோக்கில் மூலதன ஒதுக்கீட்டு முடிவுகளை எடுக்கிறது. மின் மற்றும் தானியங்கி எந்திரமயமாக்கல் பிரிவு (எலக்ட்ரிக்கல் & ஆட்டோமேஷன்) வணிகத்திலிருந்து வெளியேறுவது என்பது,செயல்பாட்டு யுக்திரீதியாக, தொழில் வணிகப்பிரிவின் மீதான மறு ஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

லார்சன் & டூப்ரோவின் குழுத் தலைவர் ஏ.எம். நாயக் இந்த செயல்பாட்டு யுக்தி நடவடிக்கை பற்றி கருத்துத் தெரிவிக்கையில்: “எலெக்ட்ரிக் & ஆட்டோமேஷன் வணிகத்தை விட்டு விலகுவது என்பது தற்போதைய நடவடிக்கையாள் நிறைவடைந்திருப்பது எங்கள் நீண்டகால யுக்தியில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். இந்த அளவில் ஒரு வணிகத்தை செதுக்குவது சவாலாக இருந்தது, பரவலான வாடிக்கையாளர் தளத்தில் குறைந்தபட்ச இடையூறுகளுடன், தொற்றுநோய்த் தடைகளுக்கு மத்தியில் அனைத்தையும் செய்துள்ளோம். எல் & டி பல ஆண்டுகளாக வளர்த்து வந்த தொழில் பிரிவை மேலும் வளர்ப்பதற்கான சரியான நிறுவனமா ஸ்நைடர் எலக்ட்ரிக் திகழும் என்று நாங்கள் நம்புகிறோம். ஸ்நைடர் எலக்ட்ரிக் உடனான இந்த ஒப்பந்தம் எங்கள் ஊழியர்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.” என்றார்.

லார்சன் & டூப்ரோவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ். என். சுப்ரமண்யன் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் மிகவும் வலுவான,நீண்டகால செயல்பாட்டு யுக்திகளை உருவாக்க எங்களுக்கு உதவும். இதன் மூலம் வணிகத்தின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதன் வாயிலாக எங்கள் பங்குதாரர்களுக்கு நீண்டகால மதிப்பு வாய்ப்புகளை உருவாக்க இயலும். இந்த ஒப்பந்தம் உள்நாட்டு வணிகத்தின் சரிவு மற்றும் பங்கு கொள்முதல் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலான இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் (எம் & ஏ – Mergers and acquisitions – M&A) பரிவர்த்தனை ஆகும்.. ஈபிசி கட்டுமானம் மற்றும் திட்டங்கள், உற்பத்தி மற்றும் பாதுகாப்பு மற்றும் சேவைகள் [EPC Construction & Projects, Manufacturing & Defence and Services] ஆகிய மூன்று தளங்களில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல உதவும் செயல்பாட்டு யுக்தியுடன் ஒன்றாக அமைந்திருக்கிறது..” என்றார்.

Intellectual Property Protection | Trade Marks

அண்மைக் காலங்களில் மிகவும் சிக்கலான வணிகமாக உள்ள எல்& டி நிறுவனத்தின் இ & ஏ பிரிவின், குறைந்த மற்றும் நடுத்தர மின்னழுத்த சுவிட்ச் கியர், மின் அமைப்புகள், தொழில்துறை மற்றும் கட்டிட ஆட்டோமேஷன் தீர்வுகள், எரிசக்தி மேலாண்மை அமைப்புகள், அளவீட்டு தீர்வுகள் மற்றும் திட்டங்கள் மற்றும் சேவைகள் வணிகம் தொடர்பானவை ஸ்நைடர் எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது. ஸ்நைடர் எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்புடைய பிராண்ட் அடையாளங்களைப் பயன்படுத்தும். ஏனெனில் இந்த பிராண்ட் மிகவும் பிரபலமானது மற்றும் சுவிட்ச் கியர் சந்தையில் வலுவான பிராண்ட் அடையாளத்தைக் கொண்டுள்ளது.

எல் & டி இ & ஏ பிரிவில் உள்ள சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் இனி ஸ்நைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் உலகளாவிய குடும்பத்தின் ஒரு பகுதியாக மாறுவார்கள். இந்தியாவில் நவி மும்பை, அகமதுநகர், வதோதரா, கோயம்புத்தூர் மற்றும் மைசூருவில் உள்ள எல் அண்ட் இ அண்ட் ஏ உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் உள்ள துணை நிறுவனங்கள் ஆகியவை ஸ்நைடர் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு மாற்றப்படுகின்றன. உள்ளூர் ஒப்புதல்கள் நிலுவையில் இருப்பதால், சவுதி அரேபியாவில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் & டி எலக்ட்ரிக்கல் & ஆட்டோமேஷன் சவுதி அரேபியா கம்பெனி லிமிடெட் (எல்.டி.இ.ஏ.எஸ்.ஏ) தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் கிடைத்தவுடன், ஸ்நைடர் நிறுவனத்துக்கு மாற்றப்படும்.

எல் & டி, நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஈபிசி (Engineering, Procurement and Construction) மற்றும் சேவைகள் வணிகத்தில் மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கேற்ற யுக்தியுடன் பிற தொழில்களில் இருந்து வெளியேறியுள்ளது. துறைமுகங்கள், காப்பீடு, சாலை தொடர்பான வணிகம் மற்றும் பிற வணிகங்களில் தனது பங்குகளை அண்மையில் எல் & டி நிறுவனம் விலக்கிக் கொண்டதன் மூலம் அதிக மூலதன மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது, தற்போது ஸ்நைடர் எலக்ட்ரிக் உடனான இந்த ஒப்பந்தம் எல் & டி நிறுவனத்தின் செயல்பாடுகளை மேலும் பலப்படுத்தும்.

இந்த பரிவர்த்தனை தொடர்பாக எல் & டி நிறுவனத்தின் ஆலோசகர்களாக ஷர்துல் அமர்சந்த் மங்கல்தாஸ் (எஸ்ஏஎம்) சட்ட ஆலோசகர்கள், எர்ன்ஸ்ட் & யங் (ஈஒய்) எல்எல்பி மற்றும் ஆர்பூட் கேப்பிட்டல் ஆகியோர் செயல்பட்டனர்.

நிறுவனத்தின் பின்னணி – லார்சன் அண்ட் டூப்ரோ பற்றி….:

லார்சன் & டூப்ரோ நிறுவனம் ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது தொழில்நுட்பம், பொறியியல், கட்டுமானம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு 21 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் நிறுவனமாகத் திகழ்கிறது. உலகம் முழுவதிலும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்திய தனியார் துறை நிறுவனங்களில் மிகப் பெரிய மற்றும் பெரிதும் மதிக்கப்படும் நிறுவனங்களுள் ஒன்றாக எல் அண்ட் டி திகழ்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்ட வலுவான நோக்கத்துடன் செயல்படுவதாலும், உயர்தரத்தை தொடர்ந்து பராமரித்து வருவதாலும் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு துறைகளில் தலைசிறந்த இடத்தை எல் அண்ட் டி நிறுவனம் பிடித்து இருப்பதுடன் அந்த இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader