காதலர்கள் கொண்டாடிய காதலுக்கு மரியாதை

Get real time updates directly on you device, subscribe now.

சினிமாவையும் தாண்டி காதலர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று கொண்டாடி மகிழ்ந்த திரைப்படம் காதலுக்கு மரியாதை. இது உண்மையிலேயே காதலுக்கு மரியாதை தந்த படம்.

அனியத்திப் புறாவு என்ற மலையாள படத்திற்கு இசையமைத்தவர் அவ்ஸ்பச்சன். இப்படம் பல மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டது. தமிழில், இளையராஜா; தெலுங்கில், சிற்பி; ஹிந்தியில், ஏ.ஆர்.ரஹ்மான்; கன்னடத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இந்த படத்திற்கு இசை அமைத்தனர். ஆனால் இதில் வெற்றி வாகை சூடியது, தமிழ் படத்திற்கு இசையமைத்த நம்ம இசைஞானி தான்!

பாசில் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான படம்தான் அனியத்திப் புறாவு. இப்படத்தை, காதலுக்கு மரியாதை என, தமிழிலும் அவரே இயக்கினார். பெற்றோருக்காக காதலை தியாகம் செய்கிறது, இளம் ஜோடி. அவர்களின் தியாகத்தை ஏற்று, அவர்களை இணைத்து வைக்கின்றனர், பெற்றோர். இது தான் படத்தின் அடிநாதம்.

கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனம், பெண்ணை கேலி செய்யும் காட்சி என எதுவும், இப்படத்தில் துளியும் இல்லை. குடும்பத்துடன் மக்கள் திரண்டு வந்து படத்திற்கு, வெற்றி வாகை சூடி மகிழ்ந்தனர்.

இப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது, அப்பாஸ் தானாம். ஆனால் அவரின் மேனஜரின் அலட்சியம், அந்த வாய்ப்பை பறிகொடுக்கச் செய்தது. அதன்பின் விஜய், இப்படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பின், அவரின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.

இப்படத்தின் கதாநாயகியாக, புதுமுகம் இருக்க வேண்டும் என, பாசில் விரும்பினார். மலையாளத்தில் நடித்த ஷாலினியே, தமிழ் பதிப்பிலும் நடிக்க ஆர்வம் காட்டியதால், அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இளையராஜாவின் இசையில், பழனிபாரதியின் வரிகளில், என்னை தாலாட்ட, ஆனந்த குயிலின் பாட்டு, ஒரு பட்டாம்பூச்சி, இது சங்கீத திருநாளோ, ஓ பேபி, அய்யா வீடு திறந்து தான்… ஆகிய பாடல்கள், தமிழகம் எங்கும் ஒலித்தன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader