IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

காதலி இறந்த துக்கம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட காதலன்

Get real time updates directly on you device, subscribe now.

காதலி இறந்த சோகத்தில் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் கோட்டைக்காளை (வயது 24) . இவர் மதுரையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.


அதே ஊரைச் சேர்ந்த சத்யா என்ற பெண் கடந்த சில வருடங்களுக்கு முன் பழக்கமானது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாகமாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் தீடீரென சத்யாவின் பெற்றோர்கள் இறந்துவிட்டார்கள்.


அதன் பின் சத்யா தன் பாட்டி வீட்டில் வசித்து வந்தார். கோட்டைக்காளை தன் பெற்றோரிடம் சத்யாவை திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் சத்யாவிற்கு திருமண வயது வரவில்லை.


அதனால் ஒரு வருடத்திற்கு பிறகு திருமணம் செய்து வைப்பதாக கோட்டைக்காளையின் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள். இதற்குகிடையில் சத்யாவின் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


அப்போது பாட்டி வீட்டிற்கு வந்து பார்த்தப்போது சத்யா வீட்டியின் மையத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தை கண்டு அதிர்ந்து போனார் . உடனே அப்பகுதி மக்கள் இச்சம்பவத்தை பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


விரைந்து வந்த போலீசார் சத்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து சோழவந்தான் பகுதியை சேர்ந்த போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதனால் காதலி இறந்த சோகத்தில் கோட்டைக்காளை இருந்துள்ளார்.


சத்யா இறந்த சம்பவத்திற்கு பிறகு அவர் யாருடனும் பேசாமல் சோகத்தில் மூழ்கியிருந்தார்.தன் காதலி இருக்கும் இடத்திற்கு தானும் செல்லவேண்டுமென எண்ணி கோட்டைக்காளையும் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.


பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து கோட்டைக்காளை தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தை கண்டு அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து காடுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.


அங்கு விரைந்து வந்த போலீசார் கோட்டைக்காளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சோழவந்தானிலுள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் சத்யா மற்றும் கோட்டைக்காளை தொடர் தற்கொலையில் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என பல கோணங்களில் சத்யாவின் பாட்டி மற்றும் கோட்டைக்காளை பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


#solavanthan #lovers #suicide

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader