IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கிய காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி!

26

திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கிய காதலன் திருமணத்தை காதலி தடுத்து நிறுத்தினார். தாலி கட்டும் நேரத்தில் அதிரடியாக கல்யாண மண்டபத்துக்குச் சென்ற அவர் மணமகன் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் திருமணத்தை நிறுத்தியதோடு, மோசடி காதலனை கைது செய்தனர்.


மதுரை ஆர்.எஸ் குளம் பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 27). இவருக்கு மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. பெற்றோர்களால் நிச்சயிக்கப் பட்ட இந்த திருமண விழாவுக்காக இரு வீட்டாரும் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர். திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக உறவினர்களும் மண்டபத்திற்கு வந்திருந்தனர்.

கள்ளக்காதலனை பிரிய முடியாமல் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தாய்

முகூர்த்த நேரம் நெருங்கியபோது மணமக்கள் மணமேடைக்கு வந்தனர். இளம்பெண்ணுக்கு தாலி கட்ட முனியாண்டி தயாராக இருந்தார். தாலி கட்டும் நேரத்தில் திடீரென வேறு ஒரு இளம்பெண் மணமேடைக்கு அருகில் வந்து கூச்சலிட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தாலி கட்டத் தயாரான மணமகன் மற்றும் மணமேடையில் இருந்தவர்கள் ஷாக் ஆயினர்.


அப்போது அந்த பெண் திருமணத்தை நிறுத்துமாறு கூறினார். இதனால் இருவீட்டாரின் உறவினர்களும் அதிர்ந்தனர். ஏன் திருமணத்தில் வந்து தகராறு செய்கிறாய்? என்று அந்த பெண்ணிடம் அனைவரும் சரமாரியாக கேள்வி கேட்டனர். அவர்களுக்குப் பதில் அளித்த இளம்பெண், நானும், முனியாண்டியும் காதலித்தோம். காதலித்தபோது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார், என்று கதறி அழுதபடி கூறினார்.


இதனால் திருமணம் நின்றது. மணமகள் கண்ணீர் வடித்தார். மணமகளின் பெற்றோர் தன் மகளை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். முன்னதாக கர்ப்பமாகியிருப்பதாகக் கூறி திருமணத்தை நிறுத்திய பெண்ணும் போலீசில் தனியாக புகார் கொடுத்திருந்தார். இரு புகார்களின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தினர். மணமகன் முனியாண்டி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

#love #pregnancy #marriage #madurai