IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தோழியை நம்பி காதலனிடம் வாழ்க்கையை பறிகொடுத்த நடன அழகி!

18

திருமண செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்து நடன அழகியை காதலன் ஏமாற்றியுள்ளார். இதற்கு பெண்ணின் தோழியும் உடைந்தை. இது குறித்து அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

20 வயது மாணவனை கடத்திய 30 வயது பெண்

சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் காயத்ரி (வயது 26). இவர் மேடைகளில் நடனமாடி பாடி வருகிறார். இவருக்கு மதுரை மேலூரை சேர்ந்த மீனா என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவர்.


இந்நிலையில் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காயத்ரி புகார் கொடுத்தார். புகாரில், நானும், மீனாவும் நெருங்கிய தோழிகள். மீனா மூலமாக சக்திவேல் (வயது 29) என்பவர் அறிமுகமானார். அது நாளடைவில் காதலாக மாறியது. சக்திவேல் என்னை திருமணம் செய்வதாக கூறினார். இதனால் அவரிடன் என்னை நான் இழந்தேன். என்னை ஏமாற்றி பலாத்காரம் செய்து விட்டார். இப்போது அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.


இதற்கு மீனாவும் உடந்தையாக இருந்துள்ளார். மேலும் என்னிடம் இருந்து ரூ1.லட்சத்து 24 ஆயிரம் பணத்தையும் சக்திவேல் பறித்து கொண்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை ஏமாற்றுவதற்கு உடந்தையாக இருந்த மீனா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

#love #rape #crime #cheating #friend