IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

காதலுக்கு ஒப்பு கொள்ளாததால் இளம்பெண்ணை கத்தியால் குத்திய காதலன்

Get real time updates directly on you device, subscribe now.


காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் சிதம்பரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவர் பிளஸ் 2 படித்து விட்டு ஒரு சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.


அதே கடையில் உளுந்தூர் பேட்டை களமருதூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரும் வேலை பார்த்தார். இருவரும் பேசி பழகி வந்தனர். இந்நிலையில் திடீரென சக்திவேலை சிப்ஸ் கடை உருமையாளர் பணியில் இருந்து நீக்கி விட்டார். இதை அடுத்து தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.


அதனால் இருவரும் செல்போன் மூலம் பேசி வந்தனர். சில நாட்களாக சக்திவேலுடன் பேசுவதை இளம் பெண் தவிர்த்தார். இதையடுத்து இளம் பெண்ணை நேரில் பார்த்து வர முடிவு செய்தார் சக்திவேல். பின்னர் வடமூரில் உள்ள இளம் பெண்ணின் பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சக்திவேல் இளம் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டார்.


இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததுடன், அவரது காதலையும் ஏற்க மறுத்து விட்டார். அதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தன்னிடம் இருந்த கத்தியை வைத்து இளம் பெண்ணின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக குத்தினார். அவர் சத்தம் போட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சக்திவேல் தப்பி ஓடிவிட்டார். இரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று இளம் பெண் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தப்பி ஓடிய சக்திவேலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


#love #murder #Crime #cuddalur

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader