IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தாலி கட்டும் இறுதி நேரம் வரை காதலனுக்காக மணமேடையில் காத்திருந்த மணப்பெண்!

16

காதலித்தவனை திருமணம் செய்ய போகும் சந்தோசத்தில் மணவரையில் காத்திருந்த பெண்ணை விட்டு காதலன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அந்த திருமணம் நின்றுவிட்டது.


மதுரை மேலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் கருப்பசாமி (வயது 22). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சக்கபட்டு நேற்று திருமணம் நடைபெற இருந்தது.


திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மணமகன் மற்றும் மனமகள் வீட்டார் திருமண வேலைகளை கடந்த 2 மாதமாக செய்து வந்தனர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப் பட்ட இந்த திருமணத்திற்காக சொந்தபந்தங்கள் அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கிய நேரத்தில் மணமேடைக்கு மணப்பெண்ணை அழைத்து வந்தனர். பின்னர் மணமகனை அழைத்து வர மணமகன் அறைக்குச் சென்றனர். அங்கு மணமகன் இல்லை.


இதனால் முதலில் மணமகனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்திலும், நண்பர்களிடமும் கேட்டனர். எந்த தகவலும் கிடைக்காததால் மணப்பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அழுதனர். இதனால் திருமணம் நின்றுவிட்டது. அதிர்ச்சியில் உறைந்துபோன மணப்பெண் வீட்டார், மணமகனை காணவில்லை எனவும், மணமகன் எங்கள் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் போலீசில் புகார் கொடுத்தனர்.


கள்ளக்காதலனை பிரிய முடியாத தாய்

புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் மணமகனும், மணமகளும் காதலித்து வந்துள்ளனர். பல பிரச்சனைகளுக்குப் பிறகு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஆனால் மணமகன் வீட்டில் வரதச்சணை கேட்டதாகவும், மணமகள் வீட்டில் திருமணத்திற்குப் பிறகு தருவதாகவும் தெரிய வந்தது, இதனால் வரதட்சணை தகராறில் திருமணம் நின்று இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

#love #couple #marriage #madurai