IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கேபிட்டல் ஃப்ளோட் வழங்கும் ஃபாஸ்ட் லோன்கள்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் டிஜிடல் கடன் வழங்கலில் முன்னணி வகிக்கும் கேபிடல் ஃப்ளோட் கோவை போன்ற 2ஆம் நிலை நகரங்களில் ஹப் & ஸ்போக் மாதிரி வழியே கடன் அளிப்பதன் மூலம் விரிவாக்கப் பணிகளில் கவனம் செலுத்த உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் சந்தையில் சிறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளது. சந்தை மற்றும் கூட்டாளியின் கருத்தின்படி இந்நிறுவனம் பிராந்தியத்திலுள்ள சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ 3 லட்சம் ரூ 15 லட்சம் வரையிலான ஆட்டோமேடெட் ஸ்மால் டிக்கெட் நடைமுறை மூலதனக் கடன்களையும், சில்லரை வணிகங்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட முறையான கடன் வசதிகளையும் கார்ட் ஸ்வைப் மூலமும் வழங்கும்.

இது குறித்து கேபிடல் ஃப்ளோட் இணை நிறுவனர் கௌரவ் ஹிந்துஜா கூறுகையில் :

‘எங்களது எளிதான, வேகமான மற்றும் காகிதமற்ற கடன்கள் மூலம் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களிலுள்ல சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஆற்றலை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்நகரங்களில் முறைப்படுத்தப்பட்ட கடன் பொருளாதாரத்தை உருவாக்குவதில் கேபிடல் ஃப்ளோட் வரலாற்று ரீதியாக கவனம் செலுத்தி வரும் நிறுவனமாகும்.

எங்களது ஹப் & ஸ்போக் மாதிரி மூலம் பிராந்தியத்திலுள்ள திருப்பூர், பொள்ளாச்சி, பழநி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை நகர சிறு வணிகங்களுக்குத் தேவையான நடைமுறை மூலதனத்தை வழங்கும் சேவையில் திறம்பட இயங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்கள் சேனல் கூட்டாளி உதவியுடன், ஆண்டு இறுதிக்குள் எங்கள் வாடிக்கையாளர் மற்றும் கடன் பெறுவோர் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்’என்றார்.

வழக்கமாக அதிக காகிதப் பணியும், நீண்ட காலக் காத்திருப்பும் உள்ள கடன் பெறும் பிரிவினருக்கு ‘ஃபாஸ்ட்’ கடன் பெறும் அனுபவத்தை டிஜிடல் முறையில் கேபிடல் ஃப்ளோட் அறிமுகப்படுத்தும். அதி நவீன தொழில்நுட்பம் மற்றும் டிரெக்ட் செல்லிங்க் அசோசியேட்ஸ் (டிஎஸ்ஏ) உடனான கூட்டாண்மை மூலம் கேபிடல் ஃப்ளோட் முறையான நிதி உதவியை பிராந்தியத்தின் அதிகம் பட்டியலிடப்படாத பகுதிகளுக்கு எடுத்துச் சென்று 3 நாள்களுக்குள் கடன் வழங்கும்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவை மிகப் பெரிய வணிக நகரம் என்பதுடன் தயாரிப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிலும் முன்னிலை வகிக்கும் நகரங்களில் ஒன்றாகும். இதன் சந்தைத் திறன் அபரிமிதம் என்பதால் இம்மூன்று துறைகளின் வளர்சிக்கும் உறுதுணையாக இருக்க நிறுவனம் விரும்புகிறது. இப்பிரந்தியத்தில் கேபிடல் ஃப்ளோட் வழங்கிய கடன் தொகை ரூ 93 கோடிகளுக்கும் அதிகம். ஆடைகள், வெண்மைச் சரக்குகள், எந்திரம் & கருவிகள் உள்ளிட்ட மூன்று முக்கிய துறைகளை உள்ளடக்கிய சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சராசரி கடன் அளவு ரூ 22 லட்சங்கள் ஆகும்.

இது குறித்து கோவையிலுள்ள கேபிடல் ஃப்ளோட் சிறு நடுத்தர நிறுவன வாடிக்கையாளர் ஒருவரான ராஜ்குமார் பேசுகையில் ‘வங்கி சாராப் பிரிவிலுள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் நான் எதிர்பார்த்த சரியான அளவுக்குக் கேபிடல் ஃப்ளோட் எனக்குச் சேவை வழங்கி வருகிறது. கேபிடல் ஃப்ளோட் மூலம் எனக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் கடன் கிடைத்தது. ஏனைய நிதி நிறுவனங்களில் கிடைக்காத வகையில், நான் எதிர்பார்த்த அளவுக்கு எனக்குக் கடன் தொகை கிடைத்தது. மொத்தத்தில் கேபிடல் ஃப்ளோட் வழங்கிய ஆதரவு மகத்தானது’ என்றார்.

யோகான் எண்டர்பிரைசஸ் சேனல் பார்ட்னரான சத்யா தொடர்கையில் ‘கேபிடல் ஃப்ளோட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. கடன் கிடைக்கும் அனுபவத்தை எளிமையாக்கும் வகையில் நிறுவனம் முழுமையான டிஜிடல் தளத்தை உருவாக்கி உள்ளது. இது கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சுழற்சி முறையில் கிடைக்க உதவுகிறது. கார்ட் ஸ்வைப் மூலம் கடன் வழங்குவது இன்னும் கூடுதல் சிறப்பு அம்சமாகும். குறைந்த எண்ணிக்கையிலான ஆவணங்கள் காரணமாகச் சிறு வணிகங்களுக்கு நடைமுறை மூலதனக் கடன் பெறுவது எளிமையாகிறது. நிறைவாக நாங்கள் டிஎஸ்ஏ பேஅவுட்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அவசியமே இல்லை. குறித்த நேரத்தில் கமிஷன் தொகையை வழங்குவதையும் நிறுவனம் உறுதிப்படுத்துகிறது’ என்றார்.

இந்நிறுவனம் சமீபத்தில் நுகர்வோர் கடன்வழங்கு வணிகத்திலும் தடம் பதித்து அமேசான் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு ஆன்லைனில் கடன் தருகிறது. வாடிக்கையாளர்களுக்கு கேட்பிடல் ஃப்ளோட் தனது சேவைகளை விரிவுபடுத்தியதன் மூலம் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குவதை எளிமைப்படுத்தி உள்ளது.

கேபிடல் ஃப்ளோட் இந்தியாவில் டிஜிடல் கடன் வழங்கலில் முன்னணி வகிக்கும் நிறுவனம் கேபிடல் ஃப்ளோட். நாடு முழுவதுமுள்ள வணிக நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும், புதுமையான கடன் பொருள்களை வழங்குவதில் தொழில்நுட்பம் மற்றும் பெரிய தரவுப் பகுப்பாய்வுகளை நிறுவனம் பயன்படுத்திக் கொள்கிறது. தனது டிஜிடல் கடன் அண்டர்ரைட்டிங்க் மற்றும் ஒரிஜினேஷன் அனுபவம் மூலம் பெரு நிதி நிறுவனங்கள் பாரம்பரியமாக வழங்க மறுக்கும் பொருளாதாரத்தில் பல்வேறு பிரிவுகளுக்கான நிதித் தீர்வுகளை அளிக்கும்.

2013இல் தொடங்கப்பட்ட, இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனமான (என்பிஎஃப்சி) கேபிடல் ஃப்ளோட் நிறுவனம், கேப்ஃப்ளோட் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் (பழைய பெயர் ஜென் லெஃபின் நிறுவனம்) வணிகப் பெயராகும். சைஃப் பார்ட்னர்ஸ், செக்கோய் இந்தியா, அஸ்பாடா இன்வெஸ்ட்மெண்ட்ஸ், கிரியேஷன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், கேபிடல் மேனேஜ்மெண்ட் எல்எல்சி, ரிப்பிட் கேபிடல், அமேசான் ஆகிய மார்க் முதலிட்டாளர்களிடமிருந்து நிறுவனம் கடன் பெற்றுள்ளது. பெங்களூரில் தலைமை அலுவகத்தைக் கொண்டுள்ள கேபிடல் ஃப்ளோட் நிறுவனத்துக்கு மும்பை, தில்லி என்சிஆர் மற்றும் ஏனைய நகரங்களில் கிளைகள் உள்ளன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader