IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

லாக்டவுனில் வணிகர்களின் நிலை – தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத்தலைவர் இரத்தினவேலு அவர்களின் கோரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

கொரானா தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நம் நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 40 நாட்கள் முடிந்த நிலையில் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் படிப்படியாக ஒவ்வொரு நிறுவனங்களாக செயல்பட வைக்க நமது மாநில முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத்தலைவர் திரு.எஸ்.இரத்தினவேலு அவர்கள் கூறியதாவது, வரும் 6ம் தேதி முதல் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களும் சிறு வணிகங்களும் தனது பொருட்களை உற்பத்தி மற்றும் வணிகம் செய்யக்கூடிய வாய்ப்பை பெறவிருக்கிறார்கள்.

இச்சூழ்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசிடம் சில கோரிக்கைகளை நாம் முன்னிருத்த வேண்டும்.

40 நாட்கள் ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பதால் நமது சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் MICRO SMALL AND MEDIUM ENTERPRISES என்று சொல்லக்கூடிய MSME, இவர்களுடைய மனப்பக்குவம் தற்போதைய சூழ்நிலையில் எப்படி இருக்கிறதென்றால் அவர்கள் அனைவரும் மிகுந்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தில் உள்ளனர். முன்புபோல் தொடர்ந்து வணிகம் செய்ய முடியுமா என்ற கேள்விக்குறியுடன் இருக்கிறார்கள்.

இந்த சில்லறை விற்பனையாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர வணிகர்களின் பங்கு நம் நாட்டில் எந்த அளவில் உள்ளது என்பதை அறிவது அவசியம். சில்லறை விற்பனையாளர்கள் என்பவர்கள் பல சரக்கு வணிகம், உணவுப்பொருட்கள் வணிகம், மரச்சாமான்கள் வணிகம், மருந்தகம், வீட்டு உபயோகப்பொருட்கள் வணிகம், மின் உபயோகப்பொருட்கள் வணிகம், ஆடையகம் என
பல்வேறு பொருட்களில் வணிகம் செய்து வருகின்றனர்.

இந்திய அளவின் கணக்கெடுப்பின் படி, 5 கோடி சில்லறை வணிகம் உள்ளது. இந்த 5 கோடி வணிகத்தை நம்பி 25 கோடி மக்கள் உள்ளார்கள் என்பதும் ஒரு கணிப்பு.

சிறிய தொழில் செய்பவர்களில் முறைப்படி பதிவு பெற்று மற்றும் பெறாதவர்களில் 6.3 கோடி தொழில்கள் உள்ளது. அங்கும் 30 கோடி மக்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர்.

MSME ல் 11 கோடி பேர் பணியாளர்களாக பணி புரிகின்றார்கள். வேளாண்மைக்கு பின்பு இவ்விரு தொழில்கள் அதிக வேலைவாய்ப்பில் இருக்கின்றன. இத்தொழில் மற்றும் தொழில்புரியும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்.

ஏனென்றால் இவர்களே இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று கூறலாம். நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஜிடிபி என்பர். இதில் 21 சதவீதம் நம்முடையை MSMEக்கும் 10 சதவீதம் சில்லறை விற்பனையாளர்களுக்கும் உண்டு.
நமது ஏற்றுமதி வணிகத்தில் MSME, 45 சதவீதம் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

இத்தகைய பங்குடையை இத்தொழிலாளர்களின் நிலை இச்சூழலில் மிகுந்த பயத்துடன் உள்ளது. ஏனெனில் MSME தொழிலாளர்கள் என்பவர்கள் மைக்ரோ சாதனங்கள் மற்றும் இயந்திரங்களை வைத்து தொழில்புரிபவர்கள்.

40 நாட்கள் இயங்காமல் இருக்கிற நிலையில் இந்த தளர்வு முடிந்து கடைகளை திறக்கும் போது அவை இயங்காமல் அல்லது பழுதாகியும் போகலாம்.

அவற்றை பழுதுபார்க்க மற்றும் புதிய இயந்திரங்கள் வாங்க அவர்களுக்கு பணத்தேவை ஏற்படும்.

மேலும் முழுவிபரங்களை அறிய வீடியோவை பாருங்கள்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader