IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

உள்ளாட்சி தேர்தலை தடுப்பதில் அதிமுக கவனம் – ஸ்டாலின் புகார்

Get real time updates directly on you device, subscribe now.


திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என நீதிமன்றம் வரை சென்றது திமுக கட்சிதான். தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது திமுகவின் கோரிக்கை அல்ல என ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதில் அதிமுக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் பணியில் திமுக ஈடுபட்டுவருவதாக அதிமுக அமைச்சர்கள் திட்டமிட்டு பொய் கூறி வருகின்றனர்.

தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழக அரசுதான் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தேர்தல் நடைமுறை என்ன ? என்பதை விளக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
#MKStalin #LocalElections #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader