IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உள்ளாட்சி தேர்தலுக்கு பாஜகவும் தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்

85


உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேசியிருக்கிறோம். அவர்களும் நல்ல முறையில் பேசியுள்ளனர். அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் கருத்துகள் கேட்கப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாங்களும் கட்சியினருடன் பேசி இன்றைய தினத்திற்குள் முடிவு எடுக்கப்படும். உள்ளாட்சி தேர்தல் நீண்ட காலத்திற்கு பிறகு அறிவிக்கப்பட்டு இப்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. ஒரு தேர்தலை உரிய காலத்தில் விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என வேட்பாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

முறைப்படி தேர்தல் நடத்தியிருந்தால் 2016ம் ஆண்டிலேயே தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆனால் அன்று ஏதோ ஒரு காரணம் கூறி தேர்தலை நடத்த விடாமல் தடை செய்தனர். இன்றும் அதேபோல் திமுக உள்ளாட்சி தேர்தலுக்கு முட்டுக்கட்டையாக வழக்கு தொடர்கிறது. ஆனால் தற்போது அரசு முயற்சி எடுத்திருப்பது பாராட்டக்குரியது.

தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலை சந்திக்க பா.ஜ. தயாராக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சரும், தேர்தல் பணி குழுத் தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
#PonRadhaKrishnan #LocalElections2019 #In4Net #BJP