IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வாராக் கடன் ஒதுக்கீடு : லஷ்மி விலாஸ் வங்கி நஷ்டம் ரூ.622 கோடி

10

வாராக் கடன் ஒதுக்கீடு காரணமாக லஷ்மி விலாஸ் வங்கியின் 2017-2018 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ.622.25 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2016-2017 நிதியாண்டின் கடைசி காலாண்டில் வங்கி ரூ.52.16 கோடி லாபம் ஈட்டியிருந்தது.

2017-2018 நிதியாண்டின் இறுதி காலாண்டில் வருமானம் 2016-2017 நிதியாண்டின் இதே காலாண்டைவிட 14.3 சதவீதம் சரிந்து ரூ.740.90 கோடியாக உள்ளது. வாராக் கடன் ஒதுக்கீடு ரூ.921.41 கோடி அளவுக்கு 2017-2018 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் அதிகரித்ததன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக லஷ்மி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது. வாராக் கடன் ஒதுக்கீடு 2016-2017 நிதியாண்டில் வெறும் 108.19 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.