IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

லைசால் சிமெண்ட் பரப்பு கிளீனர் அறிமுகம்

85

 

ரெக்கிட்பென்கிசரின் தயாரிப்பிலிருந்து உலகின் நம்பர் 1 கிருமிநாசினி தர அடையாளமான லைசால், சமீபத்தில் கண்டுபிடித்துள்ள லைசால் சிமெண்ட்பரப்பு கிளீனரை சென்னையில் அறிமுகப்படுத்தியது.

2011ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 3இல் 1 என இந்திய வீடுகளில் சிமெண்ட்தரை உள்ளது. 3இல் 2 வீடுகள் சிமெண்ட் தரைகளாகக் கொண்ட மிகப்பெரிய மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.

விரிவானநுகர்வோர்ஆராய்ச்சியின்போது, பெரும்பாலான சிமெண்ட் தரைகளில் பொதுவாகக் காணப்படும். வெள்ளைத்திட்டுகள் / கறைகளை அகற்றுவது, ​ இந்திய இல்லத்தரசிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. என்பதைக் கண்டுபிடித்தோம்.

கால்சியம் ஹைட்ராக்சைடால் ஆன சிமெண்ட் தரை, காற்றில் உள்ள கார்பன்டைஆக்சைடுடன் வினைபுரிந்து வெள்ளை நிறத்தில் காணப்படும். கால்சியம் கார்பனேட் உப்பை உருவாக்குகிறது. இந்த உப்பின் எச்சங்கள் சிறிது சிறிதாக சிமெண்ட் தரைகளில் உள்ள துளைகள் மற்றும் பிளவுகளுக்குள் குடியேறி வெள்ளைக் கறைகளை உருவாக்குகின்றன.

பினைல் மற்றும் டிடர்ஜெண்ட் போன்ற பொதுவானதுப் புரவுத் தீர்வுகள், இந்த உப்புகளைக் கரைக்க முடியாமல், தரையை அசுத்தமானதாகவும் கறைத்திட்டுகளாகவும் ஆக்குகின்றன.

லைசால் சிமெண்ட் தரைகிளீனர், உலகின் முதல் அறிமுகமாக, அந்தப்பிரச்சினையைத் தீர்க்க பல ஆண்டுகளாக லைசால் தரஅடையாளத்தால் மேற்கொள்ளபட்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் விளைவால், சிமெண்ட் பரப்புகளுக்கெனப் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. லைசால், ஒரு தனித்துவமான 3-இல்-1 சூத்திரத்தை வடிவமைத்துள்ளது. அதன்படி இது, நுண்துளை சிமெண்ட் தரைக்குள் ஊடுருவிக் கரைந்து கடினமான வெள்ளை எச்சங்கள் மற்றும் கறைகளை நீக்குவதாகவும் 99.9 கிருமிகளை நீக்குவதாகவும் இனியநறுமணத்தை விட்டுச்செல்வதாகவும் உள்ளது.

ஏறத்தாழ 300 இல்லங்களில் நீல்சன் மேற்கொண்ட பிற்பயன்பாட்டு நுகர்வோர் ஆராய்ச்சியில், 96 சதவீதத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் தங்களின் தற்போதைய பினைல்கள் மற்றும் டிடர்ஜெண்ட்டுகளை ஒப்பிடும்போது, சிமெண்ட் தரைகளுக்கு அதீத பயனுள்ளதாக இத்தயாரிப்பு ​​இருப்பதைக் கண்டறிந்துள்ளது. லைசால் சிமெண்ட் கிளீனர் கால்சியம் கார்பனேட் பிரச்சினைக்குத்தீர்வாக உள்ளதால், அதனைப் பயன்படுத்தியவர்கள், அன்றாடப் பயன்பாட்டிற்குப் பின், கடினமான கறைகளிலும் அது மிகச்சிறப்பாகத் தீர்வளிப்பதைக்கண்டனர்.

ஆர்.பி.ஹைஜீன்ஹோம் தெற்காசியா நிறுவனத்தின் சி.எம்.ஓ மற்றும் சந்தைப்படுத்துதல் இயக்குனர், திருசுக்லீன் அனேஜா கூறுகையில், “தரைகளைச் சுத்தம் செய்யும் பொருட்கள் வகை, இரு இலக்க வளர்ச்சியைக் கண்டுவருகிறது. நகரமயமாக்கல் மேலும் இவ்வளர்ச்சியைத் தூண்டியுள்ளது. டைல்ஸ் மற்றும் பளிங்குத்தரைகளில் சந்தையின் முழுக்கவனமும் இருக்கும் காரணத்தால், சிமெண்ட் தரைகளைக் கொண்ட இந்திய நுகர்வோரின் தேவை இன்னும் கவனிக்கப்படாமல் உள்ளது என்பதை இப்பிரிவில் தலையாய இடத்தில் இருக்கும் நாங்கள் உணர்ந்தோம். ‘தூய்மையான உலகத்தை உருவாக்குங்கள்’ என்ற எங்கள் நோக்கத்தை மேம்படுத்தும் வகையில், லைசால் சிமெண்ட் தரை கிளீனரைக் கொண்டு, எங்களின் தரைகளைச் சுத்தம் செய்வதற்கான இலாகாவை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

2020ஆம் ஆண்டில், 18 கோடிக்கும் அதிகமான வீடுகள், தென்னிந்தியாவில் மட்டும் 33% வீடுகள் சிமெண்ட் தரைகளைக் கொண்டிருக்கும். விளம்பர வெளியீட்டின் ஒரு பகுதியாக, 6 நாட்களில் பணத்தைத் திரும்பப் பெறுங்கள் என்னும் சவாலுடன் நாங்கள் இதனை அறிமுகப்படுத்துகிறோம். அந்த அளவு எங்கள் கண்டுபிடிப்பின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” எனத்தெரிவித்தார்.

“இது உலகின் முதல் தயாரிப்பு. இந்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு, இந்திய நாட்டினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தயாரிப்பைக் கொண்டு வருவது மனதைக் குளிர்விப்பதாக உள்ளது” என்று ஆர்.பி. ஹைஜீன் ஹோம்பிரிவின் இந்திய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் நவீன்ஷர்மா தெரிவிக்கிறார்.

லைசால் சிமெண்ட் தரை கிளீனர் முதல் கட்டமாக, இந்தியாவில் அதிக அளவு சிமெண்ட் தரைகளைக் கொண்ட நான்கு மாநிலங்களான தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகா மற்றும் கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. லைசால் சிமெண்ட் பரப்பு கிளீனர், எலுமிச்சை மற்றும் பைன் என இரண்டு வகைகளில் 100மில்லி மற்றும் 400 மில்லி என இரு வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும். இது 4 மாநிலங்களில் உள்ள பாரம்பரிய வணிக மற்றும் நவீன வர்த்தகக்கடைகளிலும் கிடைக்கும். 100 மில்லி ட்ரையல் பேக்கின் விலை ரூ.25 மற்றும் 400 மில்லி பாட்டிலின் விலைரூ.74 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

#Lizol #Cement #Spray #Cleaner #Introduction