IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் வெண்டைக்காய்

143

 

வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து அல்லது பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரை , அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் நிவாரணியாக உள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. வெண்டைக்காய் சாப்பிட்டால் பார்வைத் திறன் மேம்படும் என்கிற தகவல் பலருக்கும் தெரியாது. வெண்டைக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், கேட்டராக்ட் மற்றும் க்ளாக்கோமா பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடியது.

வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை வெண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வந்தால் வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

நமது உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழிக்க கூடியது வெண்டைக்காய். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

#liver #problems #Cure #Ladyfinger