IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

LIVE UPDATE: ஜி.எஸ்.டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

10


ஜி.எஸ்.டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். டெல்லியில் இன்று நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


உலகளாவிய பொருளாதாரம் மந்தமடைவது புதிதல்ல. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா , ஜெர்மனி நாடுகளே கூட பொருளாதார மந்த நிலை உள்ளது. உலகில் வேகமாக வளரும் பெருளாதார நாடக இந்தியா உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாக உள்ளது. அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாட்டில் மட்டும் இந்த சிக்கல் இல்லை


இது தொடர்பாக அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும். வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும். கீழ் மட்டத்தில் உள்ள அனைத்தையும் உணர்ந்தே அரசு செயல்படுகிறது. அனைத்து பிரச்சனைகளுக்கும் விரைவாக தீர்வு காணப்படும்.


ஜி.எஸ்.டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம். எப்போதும் போல எங்களின் நடவடிக்கைகள் தொடரும் . ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் படிப்படியாக களையப்படும்.


இந்தியவில் தொழில் முனைவோர் எளிதில் தொழில் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014ல் இருந்து சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் ; மத்திய அரசின் முதன்மை பணியாக அதுவே உள்ளது, ஜி.எஸ். டி இன்னும் எளிமையாக்கப்படும். வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.