IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தென்னாப்பிரிக்க அணிக்கு இதற்காகத்தான் பாலோ ஆன் கொடுத்தாராம் விராட் கோலி

0 99

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் இந்தியா 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹேனா 115 ரன்களும் ஜடேஜா 51 ரன்களும் எடுத்தனர்.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்களை இழந்துள்ள தென்னாப்பிரிக்க அணி இன்று காலை தொடங்கியது முதல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 162 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹம்சா 62 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளதால் இந்திய அணியை விட 335 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு பாலோ ஆன் கொடுத்துள்ளார். அதற்கு காரணம் இன்று மூன்றாவது நாள் என்பதால் இந்தியா அணி இன்னும் முப்பது ஓவர்கள் வீச முடியும். இதனால் இன்று தென்னாப்பிரிக்கா அணியின் மேலும் சில விக்கெட்களை பெற முடியும் என்பதால் பாலோ ஆன் கொடுத்துள்ளார்.

இந்திய அணியை விட 335 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்கா அணி தனது 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணி தற்போது 5 விக்கெட்களை இழந்து 64 ரன்களுடன் விளையாடி வருகிறது. Dane Piedt 9 ரன்களுடனும், George Linde 24 ரன்களுடனும் கலத்தில் விளையாடி வருகின்றனர்.