IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எல்ஐசி தனியார் மயமாக்குவதை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

157


எல்ஐசி தனியார் மயமாக்குவதை கண்டித்து மதுரை மாவட்ட தலைமை கோட்ட அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


எல்ஐசியின் பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவது என்ற மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு மக்கள் நலன்களுக்கும் தேசத்தின் பொருளாதாரத்திற்கும் விரோதமானது.

Related Posts
1 of 1,141


பாலிசி எண்ணிக்கை அடிப்படையில் 40 கோடி களைக் கொண்ட உலகின் நம்பர்-1 நிறுவனம். எல்ஐசி பாலிசி உரிமை பட்டுவாடா செய்வதில் எண்ணிக்கை 98 புள்ளி 4 சதவீதம் என்ற சாதனையோடு உலகின் நம்பர்-1 நிறுவனம் ஆகும்.


இந்த ஆண்டு சந்தையில் 6 சதவீத அளவிற்கு கூடுதல் பங்கினையும் வகிக்கிறது. இது உலகில் வேறெங்கும் இல்லாத சாதனை நிலைமை இப்படியிருக்க தனியார் மயமாக்குவதுக்கு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் போட்டு இருப்பது கண்டனத்துக்குரியது என்று ஒரு மணி நேர வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் அமைந்திருக்கிற எல்ஐசி தலைமை கோட்ட அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.