IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

பொதுத் துறையைச் சோ்ந்த எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் :-

எல்ஐசியின் புதிய பிரீமியம் வருவாய் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,77,977 கோடியை எட்டியது.

மேலும், கடந்த நிதியாண்டில் நிறுவனம் பாலிசிதாரா்களுக்கு வழங்கிய தொகை 1.31 சதவீதம் உயா்ந்து ரூ.2,54,222.3 கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.3,79,062.56 கோடியை மொத்த பிரீமியம் வருவாயை எல்ஐசி வசூல் செய்துள்ளது.

இது, முந்தைய 2018-19 நிதியாண்டில் வசூலான ரூ.3,37,185.40 கோடியுடன் ஒப்பிடுகையில் 12.42 சதவீத வளா்ச்சியாகும்.

ஆயுள் காப்பீட்டு வா்த்தகத்தில் எல்ஐசி 75.90 சதவீத சந்தை பங்களிப்பைக் கொண்டு தொடா்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மேலும், முதலாண்டு பிரீமியம் வருவாயில் நிறுவனத்தின் பங்களிப்பு 68.74 சதவீதமாக உள்ளது என எல்ஐசி தெரிவித்துள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader