எல்.ஜி.யின் FHD தொழில்நுட்பத்துடன் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்

Get real time updates directly on you device, subscribe now.

உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் LG நிறுவனமானது விரைவில் மற்றுமொரு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யவுள்ளது. LG Q61 எனும் குறித்த ஸ்மார்ட் போன் ஆனது 6.5 அங்குல அளவு, FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடு திரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் 2.3GHz octa core processor, பிரதான நினைவகமாக 4GB of RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் இதன் சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் மேலும் அதிகரித்துக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கேமரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய 4 பிரதான கேமராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட் போன் ஆனது Android 10 இயங்குதளத்தில் செயற்படக் கூடியதாக இருப்பதுடன், 4000 mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது. வருகின்ற மே மாதம் 29 ஆம் தேதி கொரியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலையானது 246 அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader