IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் மெஸ்ஸி தொடர் வரலாற்று சாதனை

Get real time updates directly on you device, subscribe now.


உலக சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கும் பலூன் டி ஆர் விருதை ஆறாவது முறையாக வென்று பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பில் கால்பந்து சிறந்த வீரர்களுக்கான பலூன் டி ஆர் விருது வழங்கும் விழா பாரிஸில் நேற்று நடைபெற்றது. இந்த விருதினை பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆறாவது முறையாக பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த முறை இந்த விருதினை ரியல் மாட்ரிட் அணிவீரர் லூகா மாட்ரிக், நடப்பு ஆண்டுக்கான பலூன் டி ஆர் விருதை மெஸ்ஸிக்கு வழங்கினார். மெஸ்ஸி இந்த விருதினை பெற்றதற்கு அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கால்பந்து உலகில் தனது கால்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் மெஸ்ஸி, நடப்பு ஆண்டில் மட்டும் ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருது, அதிக கோல்கள் அடித்தற்காக வழங்கபடும் கோல்டன் பூட் விருதை ஆறு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பலூன் டி ஆர் விருதை ஆறாவது முறையாக பெற்றதன் மூலம், மிகச் சிறந்த மூன்று விருதுகளையும் தலா ஆறு முறை பெற்ற ஒரே வீரர் என்ற சிறப்பையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader