IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இத காபில கலந்து குடிச்சா தலை வலி நீங்கும்

Get real time updates directly on you device, subscribe now.


எலுமிச்சை நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கம். இவை நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் அடங்கியுள்ளது. எலுமிச்சம் பழம் புளிப்பு சுவை கொண்டது. எலுமிச்சை மட்டுமல்ல, அதன் தோல் அத்தனை மருத்துவக் குணங்கள் கொண்டது. அந்த மகிமை தெரிந்துதான் நம் முன்னோர்கள் எலுமிச்சையைத் தோலோடு சேர்த்து ஊறுகாயாகத் தயாரித்துள்ளார்கள்.


எலுமிச்சையை நேரடியாகவும் சரி, பானமாகவும் சரி அல்லது எலுமிச்சை கலந்த பொருட்களாகவும் சரி, அதனை நாம் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்குசிட்ரிக் அமிலம் உள்ளது. எலுமிச்சை பழம் உடல் எடையை குறைக்க மட்டும் உபயோகப்படும் என நினக்கின்றனர். ஆனால், அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அவற்றை இங்கு காண்போம்.

  • எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்றவை நீங்கும்.

  • சருமப் புண்களுக்கு ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாற்றை முகத்தில் தடவிவர, முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் மறையும்.

  • இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.

  • காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.

  • எலுமிச்சை உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

  • எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது.

  • மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கும்.

  • கோடை காலத்தில் உடல் புத்துணர்ச்சி பெற குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு, குளிக்கலாம்.

  • எலுமிச்சையை மழை, கோடை, பனி போன்ற எல்லா காலங்களிலும் உபயோகிக்கலாம். எலுமிச்சை சாறை காய்கறிகளில் கலந்து சாலட் ஆக செய்யும் பொழுது, அந்த காய்கறிகளின் சத்து அதிகரிக்கிறது.

  • எலுமிச்சைத் தோலில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், சில வகை சருமப் புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்.

  • எலுமிச்சைத் தோலின் சாறு, காயங்களைக் குணப்படுத்த உதவும். இது பாக்டீரியா பரவாமல் தடுக்கும்.

  • எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

  • காபி அல்லது தேநீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து பருகி வந்தால் தலைவலி குணமாகும்.

  • எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும்.

#Lemon #Benefits

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader