IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மக்களுக்கு உதவ கால் சென்டரில் பணிபுரியும் முன்னணி நடிகை

Get real time updates directly on you device, subscribe now.

தமிழில் வெளியான வெற்றிவேல் படத்தில் சசிக்குமாருடன் நடித்தவர் நடிகை நிகிலா விமல். இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் அடுத்து கிடாரி படத்தில் மீண்டும் சசிக்குமாருடன் இணைந்து நடித்தார்.

தற்போது கொரோனா பரவலால் திரையுலக பிரபலங்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொடுக்க கேரளா மாநிலம் கண்ணூரில் கால் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தன்னார்வலர்கள் பணிபுரிய ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டது.

விளம்பரத்தை பார்த்த நடிகை நிகிலா விமல், உடனே அந்த கால் சென்டரை தொடர்பு கொண்டு பணியில் சேர்ந்தார். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என நிகிலா தெரிவித்துள்ளார். இவரது செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader