12.1 C
Munich
Monday, October 3, 2022

நியூ சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி கார் இந்தியாவில் அறிமுகம்

Must read

சிட்ரோய்ன் இந்தியா, ரூபாய் 36,67,000 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற சிறப்பு அறிமுக விலையில் நியூசி5 ஏர்கிராஸ் எஸ்யுவி அறிமுகம் செய்யப்படுவதை அறிவித்திருக்கிறது.  தனித்துவ அம்சங்களுடன் நவீன மற்றும் உயிரோட்டமான ஆளுமைத்தன்மை வழங்குகின்ற ஒரு வடிவமைப்பு மேம்பாட்டை நியூ சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி பெற்றிருக்கிறது.   2022-ம் ஆண்டில் இப்போது வெளிவந்திருக்கும் இக்கார், எஸ்யுவி – ன் வசதி மற்றும் தாராள இடவசதியை வலுப்படுத்துகிறவாறு உள்அலங்கார பொருட்கள் மற்றும் உயர்தர வண்ணங்களால் சிறப்பான ஆதரவைப் பெற்றிருக்கின்ற ஒரு கூர்மையான வடிவமைப்புடன் அதிக கவர்ச்சியானதாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் இருக்கிறது.  புதுடெல்லி, குர்கான், மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, சென்னை, சண்டிகார், ஜெய்ப்பூர், லக்னோ, புவனேஷ்வர், சூரத், நாக்பூர், விசாகப்பட்டினம், கோழிக்கோடு மற்றும் கோயம்புத்தூர் என்ற 19 நகரங்களில் உள்ள 20 லா மெய்சான் சிட்ரோய்ன் பிஜிடெய்ல் ஷோரூம்களில் நியூ சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி  இப்போது ரீடெய்ல் விற்பனைக்கு கிடைக்கிறது.

சிட்ராய்ன்-க்கு பிரத்யேகமான புராக்ரெசிவ் ஹைட்ராலிக் குஷன்ஸ் சஸ்பென்ஷன் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களில் அதிர்வினை தாங்கும் திறனை மேம்படுத்துகிறது மற்றும் உண்மையான “பறக்கும் கம்பளம்” அனுபவத்தை தரும் வகையில் முழுமையான சௌகரியத்தோடு பயணிகள் பயணிப்பதை உறுதி செய்கிறது.  மூன்று தனிப்பட்ட நழுவுகின்ற, சாய்ந்து கொள்கின்ற மற்றும் மடித்துக் கொள்ளக்கூடிய பின்புற இருக்கைகளை வழங்குகின்ற இப்பிரிவின் ஒரே எஸ்யுவி ஆக திகழும் இது ஒரு உண்மையான எஸ்யுவியில் மாடுலாரிட்டியை அனுபவிக்கிறது.  இக்காரின் பூட் (கொள்ளளவு), இப்பிரிவில் ஒரு புதிய சாதனை அளவாகும்: 580 லிட்டரிலிருந்து, 1630 லிட்டர் வரை ஆகும். காருக்குள் பட்டுப்பூச்சி கூட்டின் விளைவை மேலும் மேம்படுத்துவதற்காக ஒலி சார்ந்த லேமினேட்டட் முன்புற ஜன்னல்களின் மூலம் அதனை மேலும் மேம்படுத்துகின்ற விருப்பத்தேர்வுடன் ஒலி தொடர்பான பண்பியல்புகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

நியூ சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி – ன் வாரண்ட்டி செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, டெலிவரி தேதியிலிருந்து 36  மாதங்கள்  அல்லது 1,00,000 கி.மீ. ஆகியவற்றில் எது முன்னதாக வருகிறதோ  அதற்கான ஸ்டேன்டர்டு வாகன வாரண்ட்டி, போன்ற சேவை அம்சங்களை சிட்ரோய்ன் கொண்டிருக்கிறது உதிரிப்பாகங்கள் மற்றும் துணைப்பொருட்கள் மீது வாரண்ட்டி மற்றும் அதிகபட்ச சௌகரியம் மற்றும் மொபிலிட்டிக்கான 24/7 சாலையோர சர்வீஸ் வசதி போன்ற சேவைகள் இதில் உள்ளடங்கும்.  நீட்டிக்கப்பட்ட வாரண்ட்டி மற்றும் பராமரிப்பு சேவை தொகுப்புகளும் இதன் வலையமைப்பு அமைவிடங்கள் அனைத்திலும் கிடைக்கிறது.

ஸ்டெல்லான்டிஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரோலண்டு பௌச்சாரா இதுகுறித்து கூறுகையில், “சிட்ரோய்ன் தயாரிப்பு அணிவரிசையில் எமது முதன்மை எஸ்யுவியான நியூ சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம்.  சிட்ரோய்ன் அட்வான்ஸ் கம்ஃபர்ட் செயல்திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இந்த எஸ்யுவி வாகனம் இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்தே இதன் வகையினத்தில் அதிக சௌகரியமான மற்றும் நெகிழ்வுத்திறன் கொண்ட எஸ்யுவி என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் சி5 ஏர்கிராஸ் வாகனத்திற்கு இன்னும் அதிக கௌரவம்மிக்க, நவீன மற்றும் உயிரோட்டமுள்ள ஆளுமைத்திறனை வலுப்படுத்தும் வகையில் மேம்படுத்தும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.  அதிகளவு தனித்துவமான பண்பியல்பு கொண்ட எஸ்யுவிக்காக காத்திருக்கும் இந்திய வாடிக்கையாளர்களை இது நிச்சயம் ஈர்க்கும் மற்றும் அவர்களின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article