IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

குருநாகலில் களமிறங்குகிறார் மகிந்த

15

சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து பொதுஜனமுன்னணியில் இணைந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதியும்,தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டததில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று (12) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்

எதிர்வரு் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சமல் ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார்.அத்துடன் நாமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.இதனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் ஒருபோதும் விலகமாட்டார் என அவர் மேலும் தெரிவித்தார்.