IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நகை கொள்ளையர்கள் கொடுத்த வாக்கு மூலத்தில் தமிழ், தெலுங்கு சினிமா முன்னணி நடிகைகள் கலக்கம்

0 98

தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமா உலகின் முன்னணி நடிகை ஒருவருக்கு தமிழகத்தை உலுக்கிய நகைக்கடை கொள்ளையன் சுரேஷ் மற்றும் முருகன் அந்த நடிகைக்கு நகை சிலவற்றை பரிசாக அளித்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் கோர்ட்டில் சரணடைந்த சுரேஷிடம் திருச்சி தனிப்படை போலீசார் 3 விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது கொள்ளையடித்த பணத்தை வைத்து முருகன் படம் எடுக்க முயற்சி மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் கூறியதாவது,

என்னை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க எனது மாமா முருகன் திட்டமிட்டார். அதன்படி 2013ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதன்படி 45 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சனையால் படம் பாதியில் நின்று போனது. இருப்பினும் அதன்பிறகு மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்தபடம் முழுவதும் எடுக்கப்பட்டது.

கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளமாக பேசப்பட்டது. அட்வான்ஸ் தொகையாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால் படம் முடிந்தும் மீதி தொகை கொடுக்காததால் நடிகை ஐதராபாத் கோர்டிற்கு சென்றால். அதனால் படம் முழுவதும் எடுக்கப்பட்டும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டதால் மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

அதன்படி திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியில் கொள்ளையடித்தோம். பணம் கிடைத்தவுடன் சினிமா எடுக்க பிரபல நடிகையை சந்திக்க நானும் மாமா முருகனும் ஐதராபாத்தில் சந்தித்தோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் ரொம்ப பிசியாக இருப்பதாக தெரிவித்தார்.

பிரபல அந்த நடிகையிடம் நாங்கள் இருவரும் நகைக்கடை நடத்தி வருகிறோம் என அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவரும் ஆர்வமாக அப்படியா ? என்றார். பின்னர் மாமா முருகன் வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் பரிசாக வாங்கிக் கொண்டார் என தனிப்படை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் கொள்ளையன் சுரேஷ் கூறிய தகவலின்படி அந்த பிரபல நடிகை சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த வாரிசு நடிகை எனத் தெரியவருகிறது. அப்படி பார்க்கையில் அந்த நடிகை, ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தின் கதாநாயகியாக நடித்த மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் என்று தெரியவருகிறது. ஆனால் இந்தத் தகவல் உண்மையா என்று தனிப்படை போலீசாரிடம் விசாரிக்கும் போது பதில் ஏதும் தெரிவிக்காமல் சென்று விட்டனர்.

தமிழ் சினிமா உலகமே நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் சூழ்நிலையில் பிரபல நகை திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனிடம் நகை பரிசாக பெற்றதாக வந்திருக்கும் தகவலை அடுத்து அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.