IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

லலிதா ஜுவல்லரி கொள்ளையன் சுரேஷ் ஏன் நீதிமன்றத்தில் சரணடைந்தார் ?

Get real time updates directly on you device, subscribe now.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த குற்றவாளிகளுள் ஒருவர் சீராத்தோப்பு சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சரணடைந்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி இரண்டு பேர் கடையின் பக்கவாட்டில் சுவற்றில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து 7 தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் திருவாரூரில் வாகன சோதனையின் போது மணிகண்டன் என்ற குற்றவாளி போலீசாரின் பிடியில் சிக்கினார். அவருடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இது தொடர்பாக சுரேஷ் மற்றும் முருகனை பிடிக்க உறவினர்கள் 18 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
நான் மட்டும் ஹெல்மெட் போட்டிருந்தால்…?! கதறி அழும் லலிதா ஜுவல்லரி கொள்ளையனின் மனசாட்சி!!

தப்பி ஓடிய சுரேஷை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி விக்னேஷ் பிரபு முன்னிலையில் சுரேஷ் சரணடைந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் செங்கம் விரைந்துள்ளனர்.

லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பேரில் ஒருவர் மாட்டிக் கொண்டதால், தன்னை எப்படியும் போலீசார் பிடித்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் சீராப்தோப்பு சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
#LalithaJewellery #SeerathoppuSuresh #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader