IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சிறந்த செயல் திறன் கொண்ட தனியார் வங்கி என லட்சுமி விலாஸ் வங்கி கவுரவிக்கப்பட்டது

288

 

லட்சுமி விலாஸ் வங்கியை (எல்விபி) சிறந்த செயல்திறன் கொண்ட தனியார் வங்கி என பி.எஃப்.ஆர்.டி.ஏ (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) தேர்வு செய்து கவுரவித்துள்ளது. அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான இலக்கை அடைவதற்கான ‘நிலைத்திருத்தல் உறுதிமொழி ’(‘Pledge to Persist’) இயக்கத்தை சிறப்பாக மேற்கொண்டதற்கு இந்த கவுரவம் லட்சுமி விலாஸ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பி.எஃப்.ஆர்.டி.ஏ. அமைப்பானது, பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் நிறுவனங்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. லட்சுமி விலாஸ் வங்கி சிறந்த செயல்திறன் கொண்ட தனியார் வங்கி என்ற பெயரை அந்த அமைப்பிடம் இருந்து வென்றுள்ளது, ஏனெனில் இது அடல் ஓய்வூதியத் திட்ட மாதாந்திர இலக்கை 73 சதவீதம் அடைந்துள்ளது. இடமிருந்து வலமாக – பி.எஃப்.ஆர்.டி.ஏ. தலைமைப் பொது மேலாளர் ஆஷிஷ்குமார், எல்.வி.பி.யின் டெல்லி மண்டலத் தலைவர் மயங்க் பார்கவா மற்றும் பி.டி.ஆர்.டி.ஏ.வி.ன் டபிள்யூ.டி.எம் (நிதி) சுப்பிரதிம் பாண்டியோபாத்யாய்.

இது குறித்து லட்சுமி விலாஸ் வங்கியின் (எல்.வி.பி.) சில்லறை வங்கிப் பிரிவுத் தலைவர் பியூஷ் ஜெயின் கூறுகையில், “இந்த கவுரவத்தைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எல்.வி.பி.-யின் செயல் திறன் மற்றும் உறுதிப்பாட்டை அங்கீகரித்தமைக்கும், நாட்டில் நிதி அனைவரையும் நிதிச் சேவை உள்ளடக்கத்தில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதற்கும் பி.எஃப்.ஆர்.டி.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். வாடிக்கையாளர்கள் தங்கள் ஓய்வூதிய திட்டத்தை தீட்டி நல்ல முறையில் செயல்பட உதவுவதில் எல்.வி.பி. அயராத முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அதிகபட்ச இலக்கை இந்த வங்கி அடைந்து எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது” என்றார்.

லட்சுமி விலாஸ் வங்கி 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 569 கிளைகள் மற்றும் 5 விரிவாக்க மையங்கள் இப்போது இந்த வங்கிக்கு உள்ளன. இவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் திருப்திகரமான வாடிக்கையாளர்களாக உள்ளனர். 7 மண்டல அலுவலகங்கள், 1047 ஏடிஎம் களுடன் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த வங்கி செயல்படுகிறது.

சில்லறை வங்கி, கிராமப்புற வங்கி சேவை, எம்.எஸ்.எம்.இ, எனப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சேவை, பெரு நிறுவனங்கள் எனப்படும் கார்ப்பரேட்டுகளுக்கான வங்கிச் சேவை மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் என அனைத்துத் தரப்பு வாடிக்கையாளர் பிரிவுகளிலும் லட்சுமி விலாஸ் வங்கி முழு அளவில் செயல்படுகிறது. நிதி சார்ந்த இதர சேவைகளான பொது காப்பீடு, மருத்துவக் காப்பீடு, பரஸ்பர நிதி சேவை, பங்குச் சந்தை, போன்ற சேவைகளைப் பிற நிறுவனங்களின் துணையுடன் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறந்த தளத்தில் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது.

#Lakshmivilasbank