IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

லட்சுமி விலாஸ் வங்கியின் ஜுன் 30 வரை முடிந்த காலாண்டு நிதிநிலை முடிவுகள்

Get real time updates directly on you device, subscribe now.

வங்கியின் முக்கிய நிதிநிலை முடிவுகள்

  • 2020 ஜூன் காலாண்டில் வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ .0.09 கோடியாக இருக்கிறது, இது 2019 ஜூன் காலாண்டில் செயல்பாட்டு இழப்பு ரூ .25.55 கோடியாக இருந்தது.
  • 2020 ஜூன் காலாண்டில் நிகர இழப்பு ரூ .112.28 கோடியாக உள்ளது. இது 2019 ஜூன் காலாண்டில் நிகர இழப்பு ரூ .237.25 கோடியாக இருந்தது.
  • வங்கியின்  மொத்த வணிகம் ரூ. 37,471  கோடி
  • 30.6.2020 நிலவரப்படி, மொத்த வைப்புத் தொகையில் காசா (CASA) 28.44% ஆக அதிகரித்துள்ளது. இது 30.6.2019 நிலவரப்படி 27.12% ஆக இருந்தது. மற்றும் 31.3.2020 நிலவரப்படி 26.64 % ஆக இருந்தது.
  • மொத்த  வைப்புத் தொகையில் மொத்த கால வைப்பு  தொகை (Bulk Term Deposit) 4.6% ஆகும்
  • பணப்புழக்க  கவரேஜ் விகிதம் (Liquidity Coverage Ratio – LCR) 303% இது தொடர்ந்து சுமார் 300% ஆக உள்ளது.
  • நிகர வாராக் கடன் 9.64 % ஆக உள்ளது. இது 31.03.2020. நிலவரப்படி 10.04 % ஆக இருந்தது.
  • செலவு வருமான விகிதம் …….% Vs ……% இது 2019 ஜூன் காலாண்டில்
  • வாராக் கடன் ஒதுக்கீடு விகிதம் (PCR)  71.25% மேம்பட்டுள்ளது.

1. மூலதனம் திரட்டுதல் (Capital raise)

கோவிட்-19 நிலைமை காரணமாக சரக்கு போக்குவரத்து சவால்கள் எழுந்த போதிலும், கிளிக்ஸ் குழுமத்தின் கிளிக்ஸ் கேப்பிட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிளிக்ஸ் ஃபைனான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Clix Capital Service Pvt Ltd and Clix Finance India Pvt Ltd) ஆகியவற்றை வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும், கோவிட் பரவல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பரஸ்பர காரணமாக விடாமுயற்சி மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கான ஆவணங்களைத் தயாரிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இரு தரம்பும் பரஸ்பர காலத்தை 2020 செப்டம்பர் 15 வரை நீட்டிக்க ஒப்புக்கொண்டன. பொதுக் களத்தில் நிதி திரட்டுவதற்கான முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை வங்கி பங்கு முதலீட்டாளர்களிடம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும்.

2. புதிய டிஜிட்டல் வசதிகளை தொடங்குதல் (Launching of new digital offering)

ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும், நேரத்தை சரியாக பயன்படுத்துவற்கும், டிஜிட்டல் சேவைகளின் தொகுப்பை தொடங்க இந்த வங்கி முடிவு செய்துள்ளது. எங்கள் டிஜிட்டல் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு எங்கிருந்தும், எந்த நேரத்திலும், எந்த சாதனம் மூலமாகவும் உதவும்.

Intellectual Property Protection | Trade Marks

இது வாடிக்கையாளர் முழு பயணத்தையும் டிஜிட்டல் முறையில் உள்ளடக்கும். வாடிக்கையாளர்களின் கடன் வழங்குதல் மற்றும் கடன் கணக்கை மூடுவது வரை அனைத்துன் ஆன்லைல் மூலமே நடக்கிறது. சுய சேவை மொபைல் பயன்பாடு (self-service Mobile Application), சுய சேவை இணையதளங்கள் உள்ளிட்ட பல சேனல் வசதி மூலம் வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் சேவையை தொடங்க வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் மூலம் ஆன்லைனில் வீடியோ கே.ஒய்.சி வசதியை பெறுகிறார்கள். இந்த வசதி வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்துச் செல்லும் நேரத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி,படிப்படியாக டிஜிட்டல் முறையில் கடன்களை வழங்கும். குறிப்பாக குறைந்த இடர்ப்பாடு “தங்க நகைக் கடன்”வழங்கும். எங்கள் டிஜிட்டல் “எக்ஸ்பிரஸ் தங்கக் கடன்” திட்டம் கடன் வாங்குபவருக்கு விரைவாக கடன் பெற உதவும் மற்றும் கடன் வசூல் அல்லது வாராக் கடன் வசூல் ஒருங்கிணைக்கப்படும். முழு அளவிலான சேவையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியவுடன், அவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை முன்கூட்டியே நினைவூட்டுவதோடு, பின்தொடர்தலும் தானியங்கி ஆக்கப்படும்

3. லாபத்தன்மை (Profitability):

நேரடி செலவுகள் மற்றும் மறைமுக செலவுகள் இரண்டையும் குறைக்க வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மூலதன நிதிக்கு பாதிப்பு இல்லாமல் லாபத்தை மேம்படுத்துவதற்காக தங்கக் கடன்கள், அரசு உத்தரவாதக் கடன்கள் போன்ற கடன்களில் வங்கி கவனம் செலுத்துகிறது.

முக்கிய நிதி நிலை முடிவுகள் (Performance Highlights):

தென் இந்தியாவை சேர்ந்த தனியார் துறை வங்கியான லஷ்மி விலாஸ் பேங்க் (Lakshmi Vilas Bank – LVB), 30 ஜூன் 2020 உடன் முடிந்த முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது

  • வங்கியின் மொத்த வணிகம் 30/06/2020 நிலவரப்படி ரூ. 37,471 கோடியாக உள்ளது. இது, 2019 ஜூன் 30 நிலவரப்படி ரூ. 49,536 கோடியாக இருந்தது.
  • மொத்த வைப்புத் தொகையில் காசா (CASA) 30/6/2020 நிலவரப்படி 28.44% ஆக உயர்ந்தது,  இது, 30.6.2019 நிலவரப்படி 27.12 % ஆக இருந்தது.
  • வழங்கப்பட்ட மொத்தக் கடன்கள் (Gross Advances), 30/06/2019 -ல் ரூ. 20,556 கோடியாக இருந்தது. 2020 ஜூன் 30-ல் ரூ. 16,310 கோடியாக உள்ளது. குறைந்த வருமானம் கொண்ட மொத்தக் கடன்களை குறைத்தது மற்றும் இடர்ப்பாடு குறைவான கடன்களை தேர்வு செய்தது ஆகியவை இதற்கு காரணங்களாகும்.
  • மொத்த வைப்புத்தொகை (Bulk Deposits) சுமார் ரூ.1,376 கோடி குறைந்து ரூ.974 கோடியாக உள்ளது. இது, 30 ஜூன் 2019 நிலவரப்படி ரூ. 2,350 கோடியாக இருந்தது.
  • வங்கியின் செயல்பாட்டு லாபம் (Operating Profit) 30.6.2020 உடன் முடிந்த காலாண்டில் ரூ. 0.09 கோடியாக உள்ளது. 30.6.2019 உடன் முடிந்த காலாண்டில் செயல்பாட்டு இழப்பு ரூ.25.55 கோடியாக இருந்தது. 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் செயல்பாட்டு லாபம் ரூ. 70.32 கோடியாக இருந்தது.
  • செலவு, வருமானத்துக்கான விகிதம் (Cost to Income ratio), 2020 ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிந்த முதல் காலாண்டில் 99.95% ஆக உள்ளது. இது, 2019 ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 114.45% ஆக உள்ளது.
  • வரி ஒதுக்கீட்டிற்கு முந்தைய (before tax provision) இழப்பு 30/6/2020 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.112.28 கோடியாக இருக்கிறது. இது 30/6/2019 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.237.25 ஆகவும் இருந்தது. இது 31/3/2020 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 233.15 கோடியாகும்.
  • வரிக்குப் பிந்தைய நிகர இழப்பு (Net Loss after Tax) ஜூன் 30 2020 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.112.28 கோடியாக உள்ளது. 2019 ஜூன் உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர இழப்பு ரூ. 237.25 கோடியாக இருந்தது. மார்ச் 30 2020 உடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் (Net Profit after Tax ) ரூ. 92.86 கோடியாக இருந்தது.
  • ஜூன் 30, 2020 உடன் முடிந்த காலாண்டில் நிகர வட்டி லாபம் (Net Interest Margin – NIM) 1.58% ஆக உள்ளது.இது ஜூன் 30, 2019 உடன் முடிந்த காலாண்டில் 1.65% ஆக உள்ளது இது, மார்ச் 31, 2019 உடன் முடிந்த நிதி ஆண்டில் 1.11% ஆக இருந்தது

மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy):

வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio – CAR), பேசல் III விதிமுறைகளின் படி (Basel III guidelines)2020 ஜூன் 30ம் தேதி நிலவரப்படி 0.17% ஆக உள்ளது. இது 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 1.12% ஆக இருந்தது.
வாராகடன்  (NPA)

மொத்த வாராக் கடன் (Gross NPA) 30/06/2020 -ல் 25.40% ஆக உள்ளது. இது 2019 ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி 17.30% ஆக இருந்தது. மொத்த வாராக் கடன் 31/03/2020 -ல் 25.39% ஆக இருந்தது. நிகர வாராக் கடன் (Net NPA) 30/06/2020 -ல் 9.64% ஆக உள்ளது. இது 2019 ஜூன் 30 ஆம் தேதிநிலவரப்படி 8.30% ஆக இருந்தது . நிகர வாராக் கடன், 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 10.04% ஆக இருந்தது.

ஏ.எ.எம் மையங்கள்: வங்கி அதன் அனைத்து ஏ.டி.எம் மையங்களையும் சொந்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட ஒபெக்ஸ் மாடலுக்கு (Opex model) மாற்றுகிறது. இதன் எங்கள் மற்றும் அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை செய்ய முடியும்.

வங்கிப் பற்றி..!

இந்த வங்கிக்கு 30/06/2020 நிலவரப்படி, 566 கிளைகள், 5 விரிவாக்க கவுண்டர்கள், 19 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேசத்தில் 918 ஏ.டி.எம் மையங்கள் உள்ளன. இந்த வங்கி பல்வேறு நிதித் திட்டங்கள் மற்றும் சேவைகளை அளித்து வருகிறது. நீண்ட காலத்தில் நிலையான மற்றும் உயர் தரமான வணிகத்தை மேற்கொள்ள இந்த வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வங்கியின் வணிகத்தில் தமிழகம் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. லஷ்மி விலாஸ் பேங்க்-ன், 30/6/2020 உடன் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை முடிவுகளுக்கு சென்னையில் 2020 ஜூலை 30 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது..

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader