IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வைப்பீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் லக்ஷ்மி விலாஸ் வங்கி

Get real time updates directly on you device, subscribe now.

ஊடகங்களில் லக்ஷ்மி விலாஸ் பேங்க் (Lakshmi Vilas Bank – LVB) பற்றி, தற்போதைய சூழ்நிலையின் உண்மை நிலையை தவறாக சித்தரித்து செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில், லக்ஷ்மி விலாஸ் பேங்க், தனது வாடிக்கையாளர்களை வங்கியிலிருந்து வரும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் தவறாக வழிநடத்தும் எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறது.

வங்கியின் அன்றாட செயல்களை நடத்துவதற்காக மூன்று பேர்கள் கொண்ட இயக்குநர் குழுவை (committee of directors – CoD) ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் நியமித்துள்ளது. இந்த இயக்குநர் குழு, வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரிக்கு (MD & CEO) உரிய அதிகாரத்துடன் இடைக்காலத்தில் செயல்படும். எல்.வி.பி தனது பங்குதாரர்களுக்கு (stakeholders) அதன் வாக்குறுதி மற்றும் உறுதிப்பாட்டை பூர்த்தி செய்ய போதுமான அளவு பணப்புழக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூற விரும்புகிறது.

அதன் முதிர்ச்சியடைந்த வைப்புத்தொகை (maturing deposits) மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை, வாடிக்கையாளர்கள் எப்போது தேர்வு செய்தாலும், எந்த தாமதமும் இன்றி அது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. முதிர்ச்சி அடையும் வைப்பு நிதிகளின் மாற்றம் மற்றும் புதிய வரவுகள் (புதிய வைப்புத் தொகை) ஆகியவை வங்கியில் நடந்துகொண்டிருக்கிறது. பணப்புழக்கம் (liquidity) மற்றும் சில முக்கிய பணப்புழக்க விகிதங்கள் குறித்து தினசரி அறிக்கைகளை ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பிப்பது வங்கி ஒழுங்குமுறை பொறுப்பாக உள்ளது. எல்.வி.பி –ன் பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (Liquidity Coverage Ratio -LCR) தொடர்ந்து 250% க்கு மேல் உள்ளது, இது வங்கியின் நல்ல பணப்புழக்க நிலையை குறிக்கிறது. ஒழுங்குமுறை அமைப்பின் குறைந்தபட்ச தேவை 100% என்றாலும், நல்ல வங்கிகள் அதிக சதவீதத்தை பராமரிக்க முயற்சி செய்கின்றன.

Intellectual Property Protection | Trade Marks

கடந்த ஒரு வாரத்தில் வங்கியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு தொகை எதுவும் வெளியேறவில்லை என்பதை வங்கி தெரிவிக்க விரும்புகிறது. எந்தவொரு சொத்து – பொறுப்பு தவறான பொருத்தத்தையும் (assets-liability mis-match.) வங்கி கொண்டிருக்கவில்லை. வங்கிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பு (ரிசர்வ் வங்கி) நிதி / பணப்புழக்க நிலையை (funds / liquidity position) மிக அடிக்கடி கண்காணித்து வருகிறது. மேலும் அதன் பார்வையில், வங்கியில் எந்த சிக்கலும் இல்லை.

இந்த வங்கியின் வைப்புத்தொகையில் (liabilities) 21% ரொக்கம் மற்றும் பத்திரங்கள் (Cash and Securities) இரண்டிலும் வைத்திருக்க வங்கி ஒழுங்குமுறை அமைப்பான ரிசர்வ் வங்கியிடம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. இது இந்த குறைந்தபட்ச தேவையை விட மிக அதிகமான விகிதத்தில் எல்.வி.பி-ல் பராமரிக்கப்படுகிறது.

எல்.வி.பி தனது வட்டி பொறுப்புகளை (interest obligations) அடுக்கு II பத்திரதாரர்களுக்கு (Tier II bond holders) புதன்கிழமை (செப்டம்பர் 30, 2020) அன்று வழங்கியுள்ளது மற்றும் ரூ. 15 கோடி வட்டி கொடுத்துள்ளது.. இதுபோன்ற எந்தவொரு பொறுப்பிலும் வங்கி ஒருபோதும் தவறவில்லை. புதிய மூலதனத்தை (capital) திரட்டுவதற்கான இறுதி கட்டத்தில் வங்கி உள்ளது. இதனை விடாமுயற்சியுடன் மேற்கொண்டு வருகிறது. விரைவில் மூலதனம் வங்கியில் சேர்க்கப்படுவதை அறிவிக்கும். அனைத்து வைப்பு நிதியாளர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது வங்கியின் பிரதான பொறுப்பு என்று எல்.வி.பி உறுதியளிக்க விரும்புகிறது.

லக்ஷ்மி விலாஸ் வங்கி பற்றி:

லக்ஷ்மி விலாஸ் வங்கி 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் பரவலாக இயங்கி வரும் 555-க்கும் அதிகமான கிளைகளின் வலுவான செயல்பாடுகளின் மூலம் 2 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தனது வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியா முழுவதிலும் செயல்பாடுகளை பரவலாக கொண்டிருப்பதால் 5 விரிவுப்படுத்தப்பட்ட கவுண்டர்கள், 7 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 970 ஏடிஎம் களுடன் 19 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்திலும் இந்த வங்கி செயல்படுகிறது.

இவ்வங்கி சில்லறை, நடுத்தரச் சந்தை மற்றும் மிகச்சிறிய, சிறிய நடுத்தர மற்றும் கார்பொரேட் தொழில்துறைகளுக்கான வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அந்நிய வர்த்தகத்தையும் மேற்கொண்டு வருகிறது. நிதி சார்ந்த இதர சேவைகளான ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு, மருத்துவக் காப்பீடு, பரஸ்பர நிதி சேவை, பங்குச் சந்தை, மணி ரெமிட்டன்ஸ் நிறுவனங்கள் போன்ற பிரிவுகளில் தனது நட்பு நிறுவனங்களின் துணையுடன் மேம்பட்ட தொழில்நுட்ப தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது லக்ஷ்மி விலாஸ் வங்கி.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader