IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்தில் லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகம்

265

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம்-சுரண்டை சாலையில் கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடம் அமைந்துள்ளது. இங்கு அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது.

10,11,12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வு எழுதும் மாணவர், மாணவிகள் சிறந்த கல்வி, நிறைந்த ஞானம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்று, வெற்றி பெறுவதற்காக நடத்தப்பட்ட இந்த லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகத்தில், மாணவர்களின் எழுது பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தினர் செய்திருந்தனர்.