23.1 C
Munich
Tuesday, August 9, 2022

லேக் ஹிலியர் எனும் பிங்க் நிற ஏரி பற்றிய ஆச்சரிய தகவல்

Must read

லேக் ஹிலியர் எனும் ஏரி ஆஸ்திரேலியாவில் உள்ள மேற்கு பகுதியில் மத்திய தீவுபகுதியில் இருக்கும் ஏரி. இந்த ஏரியின் சிறப்பு என்னவென்றால் வருடம் முழுவதும் கலர் மாறாமல் பிங்க் நிறத்திலேயே காணப்படும்.

தென்கடல் பகுதியில் இருந்து கொஞ்சம் தள்ளியிருக்கும் இந்த ஏரியை சுற்றி அடர்த்தியான ஈக்கொலிப்டஸ் மரங்களும் வித்தியாசமான காகித மரங்களும் நிறைய இருப்பதனால் மேல்பகுதியிலிருந்து பார்க்கும் போது நல்ல பச்சை கலர் பார்டரில் பிங்க் நிற சேலையை போன்று காட்சியளிக்கும்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த ஏரி பயங்கரமான ஆழம் கொண்டது. 2000 அடி ஆழமும் 820 அடி அகலமும் கொண்ட இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 3.7 ஏக்கர்கள் பரப்பளவை கொண்டது.

இதன் பளிச் பிங்க் கலர் உலக விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுலாக்களின் கவனத்தை பெரிதும் இந்த ஏரி ஈர்த்துள்ளது.

வருடம் முழுவதும் எப்படி கலர் மாறாமல் பிங்க் நிறத்திலேயே இந்த ஏரி காணப்படுகிறது என தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தாலும் இன்றுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை.

இந்த ஏரியில் Dunaliella salina Microbiome Alcile எனும் வேதிப்பொருள் இருப்பததாகவும் அதனால் தான் இந்த ஏரி பிங்க் நிறத்தில் காணப்படுவதாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

ஆனால் ஏரி பக்கத்தில் இருந்து பார்த்தால் லேசான பிங்க் நிறத்தில் தான் காணப்படுவதால் வேதிப்பொருள் காரணமாக இருக்குமோ என பின்வாங்கி விட்டனர்.

இந்த ஏரியின் உப்புத் தன்மையில் சிவப்பு halophilic எனும் பாக்டீரியா இருப்பதனால் தான் இந்த ஏரி பிங்க் நிறத்தில் காணப்படுவதாக உலக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த பொருளால் தான் ஏரி பிங்க் நிறத்தில் காணப்படுகிறது என எவராலும் சரியாக கூறமுடியவில்லை.

இந்த ஏரியின் சிறப்பு என்னவென்றால் இந்த ஏரியோட தண்ணீரை பாட்டிலில் நிரப்பிக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வந்தாலும் அந்த பிங்க் நிறம் மாறாமல் அப்படியே இருக்கிறது.

இதற்காகவே பெரிய பெரிய டப்பாக்களில் சுற்றுலாவினர் அள்ளிச் செல்கின்றனர்.

கடல் நீரை விட ஹிலியர் ஏரியில் உப்புத் தன்மை 10 மடங்கு அதிகம் என ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். அதனால் பிங்க் நீரை குடிக்க முடியாது. ஆதலால் குளிக்க உபயோகப்படுத்துகின்றனர்.

பிங்க் ஏரியில் நுண்ணுயிரிகள் அதிகமாக இருப்பதனால் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளுக்கு ஹிலியர் ஏரி சொர்க்கமாகும். ஏனெனில் ஆஸ்திரேலியாவின் முக்கியமான ஆராய்ச்சிகள் அனைத்தும் இங்கிருந்துதான் தொடங்குகின்றனர்.

இப்படியொரு பிங்க் ஏரி இருப்பது பற்றி 18ம் நூற்றாண்டு வரை யாருக்கும் தெரியவில்லை.

1802ம் ஆண்டு மேத்யு பிளிண்டப் எனும் ஆராய்ச்சியாளர் அந்த மலையின் உச்சியில் டிரெக்கிங் போகும்போது மேலிலிருந்து பார்க்கும் போது பிங்க் நிற ஏரியை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.

அதன் பிறகு அந்த ஏரியை பற்றி உலகம் முழுக்க தெரியப்படுத்தி உள்ளார்.

இந்த பிங்க் ஏரியில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதனால் உப்பளங்கள் எடுக்கலாம் என நிறைய பேர் எடுக்க ஆரம்பித்தனர்.

20ம் நூற்றாண்டு வரை அதிகளவில் உப்பளங்கள் எடுக்க ஆரம்பித்ததால் ஆஸ்திரேலிய அரசு இதற்கு இங்கு உப்பு எடுக்க கூடாது எனவும் இது ஆஸ்திரேலிய அதிசியம் என பாதுகாக்க சட்டம் பிறப்பித்து பாதுகாக்க ஆரம்பித்தனர்.

பிங்க் ஏரிக்கு எளிதாக சென்றுவிட முடியாது. கப்பல், படகு மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் மூலமாகத்தான் போக முடியும். அதுமட்டுமின்றி இயற்கையை ரசிப்பவர்கள் மற்றும் காடுகளை விரும்புபவர்களுக்கு இந்த ஏரி மிகவும் விருப்பமானதாகும்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article