IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்து கட்டப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

0 50

வங்கக்கடல் மற்றும் தெற்கு இலங்கை கடலோரப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது இன்று குமரி கடலை நோக்கி நகர்ந்து வலுப்பெறும். இது பின்னர் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து நாளை (31ம் தேதி) நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். குறிப்பாக தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சில இடங்களில் மழையின்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்வதால் தென்மேற்கு வங்கக்கடல் மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.