IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

குழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு

Get real time updates directly on you device, subscribe now.

ஹாய் குட்டீஸ்…!
எல்லோரும் நலமா?
ஓகே. நீங்கள் நலம்! உங்கள் பற்கள் நலமா?
உங்கள் பற்களைப் பற்றி சில முக்கியமான விசயங்களை இங்கே சொல்லப்போகிறேன்.
உங்கள் பற்கள் எதற்கெல்லாம் உபயோகப்படுகிறது தெரியுமா?

உணவை நன்கு அரைக்க, அழகான சிரிப்புக்கு, தெளிவான பேச்சுக்கு பயன்படுகிறது.

நீங்கள் விரும்பும் உணவை சாப்பிட. உங்கள் முக அழகை மேலும் மெருகேற்ற, உங்கள் தெளிவான பேச்சை அடுத்தவர்கள் ரசிக்க வைக்கும் பல் எல்லோருக்கும் ரொம்பவே முக்கியமானது. அந்த பற்களை நாம் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் அல்லவா?

அதற்கு என்ன செய்ய வேண்டும்??

காலை எழுந்த உடனும், இரவு உறங்கச் செலும் முன்னமும் பற்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நாம் சாப்பிடும் சாப்பாடு பிசுபிசுப்பு தன்மை குறைவாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும. இனிப்பு உணவை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் மிட்டாய் சாப்பிடுவதை தவிர்த்து வாரத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.

இவைகளை கடைபிடித்தால் உங்கள் பற்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இல்லையென்றால் பற்கள் அழுக்கு படிந்து, பற்சிதைவு நோய்க்கு ஆளாகி உங்களை துன்புறுத்தும்.

பெற்றோர்களே.. உங்கள் அழகுக் குழந்தைக்கு 6 மாத்தில் இருந்தே பற்கள் முளைக்க ஆரம்பிக்கும். 3 வயது வரை பால் பற்கள் வளரும். அதிகப்படியாக 3 வயது முடியும் தருவாயில் அனைத்து பால் பற்களும் வளர்ந்து விடும். 6 வயதுக்கு மேல் பெரிய பல் வளர ஆரம்பிகும். 12 வயது வரை பால் பற்கள் இருக்கும். 13 வயதுக்கு மேல் நிரந்த பல் மட்டும் இருக்கும்.

பால் பற்கள் மிக மிக முக்கியமானது. ஏனென்றால், நிரந்த பறகளின் இடத்தை தீர்மானிப்பது பால் பற்கள்தான். எனவே சிறு வயது முதலே பற்களை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும்.

அதோடு ஆண்டுக்கு ஒருமுறையாவது பல் மருத்துவரை சந்தித்து, பற்களின் அன்றைய நிலைமை குறித்து தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும்.

பற்களை பாதுகாப்போம். பளிச்சென்று சிரிப்போம்!

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader