IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

காங்கிரஸ் கட்சியிலிருந்து குஷ்பு அதிரடி நீக்கம்! பின்னணி காரணம் என்ன ?

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமா நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியான உடனே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2010 முதல் திமுகவில் பணியாற்றி வந்த நடிகை குஷ்பு, 2014 முதல் காங்கிரஸில் பணியாற்றி வந்தார். இவர் சமீபகாலமாக காங்கிரஸில் உள்ள சில நிர்வாகிகளுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தார். இவரது நடவடிக்கைகளால் கட்சி தொண்டர்கள் அவர் மீதும், அவர் கட்சி மீதும் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் இன்று புறப்பட்டு சென்றுள்ளார். இதனையடுத்து குஷ்புவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பிரனவ்ஜா அறிவித்துள்ளார்.

இவரது அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் குஷ்பு ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது,

தாம் கட்சியில் உண்மையாக பணியாற்றினேன். இது யாருக்கும் பிடிக்கவில்லை. என்னை ஒடுக்க நினைத்தனர். இதனால் நான் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்துள்ளேன்.’ பணம், பதவி, புகழ் போன்ற காரணங்களுக்காக நான் காங்., கட்சியில் சேரவில்லை. காங்கிரசில் பதவி கொடுத்த ராகுல்ஜி மற்றும் கட்சியினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader