IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி வீட்டிற்குள் புகுந்து விபத்து! சம்பவ இடத்தில் டிரைவர் பலி

Get real time updates directly on you device, subscribe now.

கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. லாரியை வேலூர் விருதம்பட்டையை சேர்ந்த டிரைவர் துரைராஜ்(60) என்பவர் ஓட்டிச் சென்றார். அவருடன் மற்றொரு லாரி டிரைவர் வெங்கடேசன் (45) உடன் சென்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்னகொம்மேஸ்வரம் பகுதி அருகே சென்றபோது லாரி , டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி, சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி டிரைவர் துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் டிரைவர் வெங்கடேசன்(45) மற்றும் வீட்டில் தூக்கி கொண்டிருந்த அஸ்மிதா(13), யுகேஷ்(12), சஞ்சய்(6) உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் லாரியின் முன்பக்கத்தில் சிக்கியிருந்த டிரைவரின் உடலை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader