IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

காட்டுக்குள் மோதல்: அண்ணன், தம்பி உயிரிழப்பு

Get real time updates directly on you device, subscribe now.

 

கோத்தகிரி அருகே காட்டுக்குள் அண்ணன், தம்பி மோதிக்கொண்டதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ளது மெட்டுக்கல் மலை கிராமம். அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 10 இருளர் குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு இக்கிராமத்தை சேர்ந்த அண்ணன்- தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும், ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கடுமையாக தாக்கிக்கொண்டார்களாம். இதில் பலத்த காயம் அடைந்த அண்ணன், தம்பி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடந்த இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை.

இன்று காலை மலைக்கிராமத்தில் இருந்து ஊருக்குள் வந்த சிலர் இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சிறுத்தை, புலி, யானை, கரடி உள்ளிட்ட கொடிய மிருகங்கள் வசிக்கும் அடர்ந்த காட்டுக்குள் இச்சம்பவம் நடந்துள்ளதால் போலீசார் சம்பவ இடத்துக்கு செல்லாமல் அதிரடி படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அதிரடிப்படை வீரர்கள் கொடிய விலங்குகளை சமாளிக்க நவீன ஆயுதங்களுடள் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்தப்பிறகே அண்ணன், தம்பி மோதிக்கொண்டது ஏன்? மோதலால் அவர்கள் இறந்தார்களா? அல்லது வேறு யாரும் கொலை செய்தார்கள் என்ற விவரம் தெரியவரும்.

#kothakiri #brothers #Fight #murder

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader