IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை வழங்கும் கோடக் லைஃப்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக நிவாரண நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் முயற்சிகளில் உதவும் வகையில், மதுரை, கோயம்புத்தூர் மாநகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள நகரப்புற குடிசைவாழ் மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினசரி கூலிவேலை செய்பவர்கள், ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை விநியோகித்து வருவதாக கோட்டக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (கோடக் லைஃப்) இன்று அறிவித்துள்ளது.

அரிசி, மாவு, பருப்பு வகைகள், சூரியகாந்தி எண்ணெய், கறிமசால் பொருட்கள் மற்றும் உப்பு ஆகியவை அடங்கிய தொகுப்புகளை விநியோகிக்கும் நடவடிக்கையை மதுரை உள்ளூர் அரசு அதிகாரிகளின் உதவியுடன் கோட்டக் லைஃப் இன்சூரன்ஸ் தொடங்கியுள்ளது. இந்த ரேஷன் பொருட்கள் தொகுப்பு ஒவ்வொன்றும், 4-5 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குடும்பத்தின் சில நாட்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும்.

கோட்டக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மேலாண்மை இயக்குநரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான ஜி.முரளிதரன் கூறுகையில், “கடந்த மூன்று மாதங்கள் தங்களின் வாழ்க்கையை நடத்துவதற்கு எந்தவித வாழ்வாதாரங்களும் இல்லாமல், மனவேதனையுடன் துன்புறும் காலமாக பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவினருக்கு இருந்துள்ளன.

இந்தியாவின் 75% முதல் 80% தொழிலாளர்கள், முறைசாரா துறையைச் சேர்ந்தவர்கள்; தற்காலிக, தினக்கூலி தொழிலாளர்களான இவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கும் பசி கொடுமையிலிருந்து விடுபட்டு, உயிர் வாழவும் போராடி வரும் நிலையில், அவர்களின் பசியை தவிர்ப்பதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கவேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது.

இந்த தொற்றுநோய் பரவல் காலத்தில் மாநிலஅரசு, அரசு அமைப்புகள் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற இத்தருணத்தில் ரேஷன் உணவுப்பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை நாங்கள் வழங்குவது என்பது எங்களது ஒரு சிறிய பங்களிப்பு முயற்சியாகும்,” என்று கூறினார்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader