IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

சக மாணவனை குத்திக் கொன்ற பள்ளி மாணவன்!

8


கொடைக்கானல் பவன்ஸ் காந்தி வித்தியாஸ்ரம் தனியார் பள்ளியின் விடுதியில் 2 மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் கத்திரிகோலால் மாணவன் ஒருவன் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளான்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிப்பள்ளதாக்கு அருகே பவன்ஸ் காந்தி வித்தியாஸ்ரம் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் இங்கு தங்கி படிக்கின்றனர். இந்த பள்ளியில் ஓசூரைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரின் மகன் கபில் ராகவேந்திராவும், விருதுநகர் ரெட்டியார் பட்டியை சேர்ந்த 16வயது சிறுவனும் 10ம் வகுப்பு படித்து வந்தனர்.


இருவரும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒரேஅறை விடுதியில் தங்கிவந்தனர். இந்நிலையில் விருதுநகரைச் சேர்ந்த சிறுவனின் நடத்தை சரியில்லாததால் அவனை தனிவிடுதி அறைக்கு மாற்றிவிட்டனர் பள்ளி நிர்வாகம்.


அதேபோல அவனிடம் யாரும் பழகக்கூடாது என தலைமையாசிரியர் கண்டித்தார். உடனே கபில் அவனை விட்டு விலகியே பள்ளிக்கு சென்று வந்தான். இந்நிலையில் கபிலுக்கும், விருதுநகரைச் சேர்ந்த சிறுவனுக்கும் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வந்து கொண்டே இருக்குமாம்.


சம்பவம் நடந்த இருதினங்களுக்கு முன் கபிலுக்கும் , விருதுநகர் பையனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கபில் ராகவேந்திரா விருதுநகரைச் சேர்ந்த சிறுவனின் சகோதரரை பற்றி அவதூறாக பேசியதால், ஆத்திரமடைந்த அந்த மாணவர் கபிலை கத்திரிகோலால் கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் குத்தியும், கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் தலையில் ஓங்கி அடித்ததில் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தான். இதில் கபில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.


பள்ளி விடுதியிலிருந்து தப்பித்து சென்ற சிறுவன், ஏரிச்சாலையில் சுற்றி திரிந்தான். ரோந்து போலீசார் அவனை பிடித்து விசாரித்ததில் பள்ளி விடுதியில் நடந்த சம்பவத்தை தெரிவித்தான். உடனே போலீசார் அந்த சிறுவனுடன் பள்ளி விரைந்தனர்.

அங்கு வந்த பின்பு கபில் ராகவேந்திரா இறந்தது பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாணவன், சேலம் சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.