IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நான்குநேரி தொகுதியில் அதிமுக தோல்வி பயமா? காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் கைது

0 28

விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. வசந்தகுமார் இன்று மதியம் 3 மணியளவில் காரில் பாளையங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

அப்போது நான்குநேரி தொகுதிக்குட்பட்ட களங்காடு என்ற பகுதி வழியாக சென்றார். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர் தேர்தல் நடக்கும் தொகுதிக்குள் வரக்கூடாது என்று தெரிவித்தனர். இருப்பினும் கன்னியாகுமரி செல்வதாக வசந்தகுமாரி கூறி அந்த வழியாக செல்ல முயன்றார்.

இதனையடுத்து போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தேர்தல் விதிமுறைகளை வசந்தகுமார் மீறியதாக கூறி கைது செய்தனர். கைது குறித்து வசந்த குமார் தெரிவிக்கையில், அதிமுகவினருக்கு தோல்வி பயம் ஏற்பட்டதால் தன்னை கைது செய்துள்ளனர் என்றார். நான்குநேரி தொகுதியில் இந்த கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#VasanthaKumar #MP #Arrest #NanguneriElection #In4Net