IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் பரம பத வாசல் திறப்பு

Get real time updates directly on you device, subscribe now.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள  கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது.

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டை டிச.27 முதல் ஜன.16ந்தேதி வரை 21 நாட்கள் தினந்தோறும் மாலை 6-15மணிக்கு பெருமாள் சப்பரத்தில் வலம் வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

வைகுண்ட ஏகாதசி தினமான திங்கள் கிழமை காலை 5-45 மணிக்கு ஸ்ரீPராமநாம பஜனை, உற்சவருக்கு திருமஞ்சனம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு பரம பத வாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து மணிக்கு கோயிலி;ன் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளத்தில்) 1008 அகல் விளக்கு தீபம் பக்தர்களால் ஏற்றப்பட்டது. நடைபெறும். தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.

#Kilappavur #Narasimmar #kovil #Parama #Padavasal #Open

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader