IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கட்டுப்பாடின்றி தொடங்கிய KIK மெசஞ்சர் அப்ளிக்கேஷன் நிறுத்தம்

6


தொழில்நுட்ப உலகில் ஏராளமான மெசஞ்சர் அப்ளிக்கேசன்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவற்றில் ஒருசில மட்டுமே நிலைத்துள்ளன. இதில் தற்போது வரை நிலைத்துள்ள KIK மெசஞ்சர் அப்ளிக்கேஷன் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட உள்ளது.


அதன்பிறகு கிக் நிறுவனம் கிரிப்டோ கரன்ஸி உருவாக்குவதில் கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்தனர். 80 பணியாளரைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் 2010ம் ஆண்டு கிக் நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் குறுகிய காலத்திலே மிகவும் பிரபலமாக காணப்பட்டது.


மெசஞ்சர் தோல்விக்கு முக்கிய காரணம் மொபைல் எண் தராமலே இந்த மெசஞ்சரில் கணக்கினை தொடங்க முடியும். எனினும் சிறுவர்கள் தொடர்பில் சரியான கட்டுப்பாடுகளை கொண்டுவராத சூழ்நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை இந்த அப்ளிக்கேஷன் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.