IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

புத்தம் புதிய கேஐஏ சோனெட் எஸ்யூ வியின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு

Get real time updates directly on you device, subscribe now.

புத்தம் புதிய கேஐஏ சோனெட் அதிகாரப்பூர்வ படங்களை வெளியிட்டது. கேஐஏ
துறையிலேயே முதன் முதலாகப் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட வசதியான எஸ்யுவி காரினை அறிமுகப்படுத்த உள்ளது.

  • கம்பீரமான புதிய காம்பேக்ட் எஸ்யுவியில் கேஐஏ ஐகானிக் வடிவமைப்பு டிஎன்ஏ மற்றும் வலுவான, உறுதியான நிலைப்பாடு
  • நுட்பமான, மேம்பட்ட பணிச்சூழலியல் ஆகியவற்றின் கலவையாகவும், அசத்தல் வடிவம் மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட கேபின்
  • துறையிலேயே முதல் முறையாக டிஜிடல் க்ளஸ்டர், 10.25 இன்ச் ஹெச்டி டச் ஸ்க்ரீன் மற்றும் சவுண்ட் மூட் லைட்டிங்க் வசதிகள்
  • கண்கவர் அம்சங்களுடன் கூடிய நுட்பமான நவீன வடிவமைப்பை எதிர்பார்க்கும் ஈடு இணையற்ற டைனமிக் உணர்வும், தொழில்நுட்ப அறிவும் கொண்ட இளம் தலைமுறையே இலக்கு
  • இந்தியக் கார் தயாரிப்பு நிறுவனங்களிலேயே முதன் முறையாக அறிமுகமான 11 மாதங்களிலேயே 1 லட்சம் அலகுகள் விற்பனை என்னும் மைல்கல்லை எட்டிச் சாதனை படைத்துள்ளது கேஐஏ மோட்டார்ஸ்

கேஐஏ மோட்டார்ஸ் கார்பரேஷன் துணை நிறுவனமான கேஐஏ மோட்டார்ஸ் இந்தியா இன்று அறிமுகமாகும் சோனெட் காம்பேக்ட் எஸ்யுவி-இன் இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர்களின் அதிகாரப்பூர்வ படங்களை வெளியிட்டது. வித்தியாசமான மற்றும் அசத்தல் வடிவமைப்பு கொண்ட கேஐஏ சோனெட் எஸ்யுவில் துறையிலேயே முதன் முதலாக பல சிறப்பம்சங்கள் உள்ளன. 2020 ஆட்டோ எக்ஸ்போவில் கருதுகோளாக முதலில் காட்சிப்படுத்தப்பட்ட காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் புத்தம் புதிய கேஐஏ சோனெட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகளாவிய பிரிமியமாக அறிமுகமாகும்.

சமீபத்தில் கேஐஏ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 1 லட்சம் அலகுகளை மொத்தமாக விற்பனை செய்து இந்திய அளவில் மைல்கல் சாதனை படைத்தது. இந்தியாவில் தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடரும் நிறுவனத்தின் புத்தம் புதிய சோனெட் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் சாதனை படைக்க உள்ளது. இந்தியாவில் தயாராகும் கேஐஏ சோனெட் எஸ்யூ வியில் நுட்பமும், நவீன வசதிகளும் கொண்ட கேபின், அசத்தல் டேஷ்போர்ட், ஸ்டைலான செண்டர் கன்சோல் உள்ளிட கண்கவர் சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.  துள்ளும் இளமையும், ஆடம்பரமும் கொண்ட இதன் பொதுவான சூழலமைவு எப்போதும் தொடர்பில் இருக்கும் நுகர்வோரான இளம் உள்ளங்களுக்கு ஏற்ற வாகனமாகும்.

ஓட்டுனருக்கும், பயணிக்கும், அதிகபட்ச வசதியை வழங்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட சோனெட் இண்டீரியர் நவீனம், துடிப்பான வாகன ஓட்டுனர்களுக்குச் சுறுசுறுப்பு உணர்வின் உச்சத்தைத் தரும். ஓட்டும் போது உரிமையாளர்களுக்கு வாகனத்தின் பயனீட்டாளர் நட்பான முழுமையான அம்சங்களை வழங்கும் வகையில் கைபேசி மற்றும் ஏனைய கருவிகளை வைக்க இரண்டு அடுக்கு ட்ரே கொண்ட டேஷ் போர்ட், ஹைடெக் டிஜிடல் டிஸ்ப்ளே, இன்ஸ்ட் ருமெண்ட் க்ளஸ்டர், பிரிவிலேயே முதன் முறையாக 10.25 இன்ச் ஹெச்டி டச் ஸ்க்ரீன், யுவிஓ இணைப்பு தொழில்நுட்பம் கொண்ட நேவிகேஷன் சிஸ்டம் உள்பட உயர்தரப் பொருள்களுடன் இதன் டேஷ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டீரிங்க் வீல் மவுண்டெட் கண்ட்ரோல், வேறுபட்ட டிரைவ் மற்றும் டிராக்ஷன் மோட் தேர்ந்தெடுக்கும் வசதியும் ஓட்டுனர்களுக்கு உண்டு. டேஷ் போர்ட்டிலுள்ள ஏர் வெண்ட்களின் மெட்டாலிக், டைமண்ட் நர்ல்ட் பேட்டர்ன், சிக் & ஸ்டைலிஷ் வடிவமைப்பு ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும்.

கேஐஏ வித்தியாசமான வடிவமைப்பு டிஎன்ஏ காரணமாக சோனெட்டின் உணர்ச்சிமிகு மற்றும் சிறப்பான வடிவமைப்பு, ஐகானிக் ・டைகர் நோஸ்・க்ரில், முக்கோண ・ஸ்டெப்வெல்・ஜியோமெட்ரிக் க்ரில் மெஷ் உள்ளிட்ட பிராண்டின் சிக்னேசர் டிசைன் பன்புகள் இந்தியக் கலைக்குச் சாட்சியாக ஊக்கம் பெற்றுக் காட்சியளிக்கும். அசத்தல் எல்இடி முகப்பு விளக்குகள் ・வைல்ட் பை டிசைன்・மையநோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்திச் சாலையில் பயணிக்கும் சோனெட் வாகனத்துக்குக் கம்பீரமான தோற்றத்தை வழங்கும்.

இது குறித்து கேஐஏ மோட்டார்ஸ் கார்பொரேஷன் மூத்த துணைத் தலைவர் மற்றும் கேஐஏ குளோபல் டிசைன் தலைவர் கரீம் ஹபீப் பேசுகையில் 挿இந்த உலகுக்குப் பெரிய வாகனங்களில் மட்டுமே காணப்படும் உறுதியான பல அம்சங்களை காம்பேட் எஸ்யுவி கேஐஏ சோனெட் வாகனத்தில் பொருத்தி அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம். இதனைக் கருத்தில் கொண்டே ஸ்போர்ட்டியாக, நம்பிக்கையான நிலைப்பாட்டுடன், டைனமிக் ஷில்லோட்டுடன் எஸ்யுவி வாகனத்தை வடிவமைத்தோம்.

இந்தியா முழுவதும் பரவியிருக்கும் கலாச்சாரப் பாரமப்ரியத்தால் ஈர்க்கப்பட்டு அதை அடிப்படையாகக் கொண்டு எங்கள் வடிவமைப்பாளர்கள், சமரசம் செய்து கொள்ளாத உயர் தர சிறப்பம்சங்கள், தேர்ந்தெடுக்கப் பல வண்ணங்கள் மற்றும் பொருள்களை உருவாக்கி உள்ளனர். கேஐஏ சோனெட் பண்புகளும், குணங்களும், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள இளம், ஆர்வமுள்ள மற்றும் எப்போதும் இணைப்பிலிருக்கும் தலைமுறையினரை ஈர்க்குமென நம்புகிறோம்・என்றார்.

புத்தம் புதிய சோனெட் வாகனத்தில் கட்டுப்பாடு மற்றும் வசதிக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்க இண்டெலிஜெண்ட் ・மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. க்ளட்ச் பெடல் இதில் இல்லை எனினும் கியர் லீவர் உண்டு என்பதால் இந்த ஐஎம்டி வித்தியாசமானது. ஆர்வமுள்ள ஓட்டுனர்கள் இனி க்ளட்ச் பெடலை அழுத்த வேண்டிய அவசியமின்றி மேனுவல் ஷிஃப்டர் மூலம் கியரை மாற்றலாம். இதன் மூலம் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேரங்களில் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் களைப்பு குறையும். இந்த சுகமான அனுபவத்துடன் க்ளட்ச் பராமரிப்பு இல்லாததால் ・அதிக அளவிலான எரிபொருள் சிக்கனத்தையும்・வழங்கிச் செலவையும் குறைக்கும்.

அனைத்து கேஐஏ மோட்டார் வாகனங்களிலும் பாதுகாப்பு முக்கிய அம்சம் என்பதால் சோனெட் விரிவான பாதுகாப்புக் கருவிகளை அமைத்துள்ளது. பயணிப்போர் நலனுக்காக ஆறு ஏர்பேக் வரை முன், பக்கம் மற்றும் தடுப்புப் பாதுகாப்புகளை உலகத் தரத்தில் பொருத்தி உள்ளது.

காம்பேக்ட் எஸ்யுவி பிரிவைக் கலக்கும் நோக்குடன் கேஐஏ மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் முழுமையான வசதி, சுகம், பாதுகாப்பு மற்றும் அதிகபட்ச ஓட்டும் மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தனது சோனெட் வாகனத்தில் மேலும் பல முன்னணி மற்றும் துறையிலேயே முதன் முறையாகப் பல முக்கிய அம்சங்களை பொருத்தி உள்ளது.

Intellectual Property Protection | Trade Marks

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader