கீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா ?

keto diet healthy tips

Get real time updates directly on you device, subscribe now.

இந்தி திரைப்பட நடிகை மிஷ்டி முகர்ஜி சிறுநீரக செயலிழப்பு காரணமாக சில நாட்களுக்கு முன் காலமானார்.

நடிகையின் மரணம் உண்மையில் கீட்டோ டயட்டால் ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் இப்போது கீட்டோ டயட் நிச்சயமாக செய்திகளில் அடிபடுகிறது.

கீட்டோ டயட் என்றும் அழைக்கப்படும் கீட்டோஜெனிக் டயட் ,அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு. இந்த உணவில், உடலானது தனது ஆற்றலுக்காக கொழுப்பை சார்ந்து இருக்கிறது.

கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து) மிகக் குறைவு மற்றும் புரதம் மிகவும் மிதமான அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் கொடுக்கப்படுகிறது.

” கீட்டோன்களை ஆற்றலுக்கான வளமாக உடல் பயன்படுத்தும் போது, அது சுருக்கமாக கீட்டோ டயட் என்று அழைக்கப்படுகிறது.” இந்த உணவில், நீங்கள் அதிகமாக கார்போஹைட்ரேட் சாப்பிடுவதில்லை. கொழுப்புகள் மிக அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இந்த உணவில், கீட்டோ ஷேக்ஸ், சீஸ், ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகள் உட்கொள்ளப்படுகின்றன. பழங்கள் கிடையாது. புரத சத்திற்காக, கோழி, மட்டன், மீன், தேங்காய் எண்ணெய் ஸ்மூத்தி (smoothie) ஆகியவவை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் உள்ளவர்கள் இந்த உணவில் அதிக சீஸ் சாப்பிடுகின்றனர், “என்று ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷிகா சர்மா விளக்குகிறார்.

கீட்டோ டயட்டின் பலன்

கீட்டோ டயட்டின் பலன் குறைந்தது ஒரு வாரத்தில் உங்கள் உடலில் தோன்றத் தொடங்குகிறது.

நீங்கள் இத்தகைய உணவை உட்கொள்ளும்போது, உங்கள் உடல் அத்தகைய உணவை ஜீரணிக்காது. எல்லாமே குடல்கள் வழியாகவே செல்கிறது. ஜீரணிக்கப்படுகின்ற உணவு உங்கள் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் நிரம்புகிறது, “என்று டாக்டர் ஷிகா சர்மா விளக்குகிறார்,

“உடல், உயிர்வாழல் செயல்முறைக்கு சென்றுவிடுகிறது. இந்த நேரத்தில், உடல் அதன் சக்தியை கீட்டோனிலிருந்து பெறுகிறது.

ஆனால் அதன் பக்க விளைவுகளும் உடலில் தோன்றத் தொடங்குகின்றன. உங்கள் உடலில் கீட்டோ உணவின் விளைவு இரண்டு அல்லது மூன்று நாட்களில் தோன்றத் தொடங்குகிறது.”

உங்கள் கல்லீரல் அல்லது பித்தப்பையில் ஏற்கனவே பிரச்சனை இருந்தால், இரண்டு அல்லது மூன்று நாட்களில் இந்த உணவின் விளைவுகளை நீங்கள் காண ஆரம்பிக்கிறீர்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் உங்கள் உடல் உறுப்புகளில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால், அதன் மோசமான விளைவைக் காண மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகலாம்.

கீட்டோ உணவுகள்

சர்க்கரை, மைதா, ரவை மற்றும் சோளமாவால் தயாரான உணவுகள் அடங்கிய சிம்பிள் கார்ப்ஸ்(சாதாரண மாவுச்சத்து) தான் உங்கள் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும், மக்கள் இந்த வகை உணவுகளை ஒதுக்க சிரமப்படுகிறார்கள். 

அவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும்போது, உடனடியாக எடை இழக்கச்செய்யும் உணவு முறையை தேடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு கீட்டோ டயட் ஒரு எளிய வழியாக கண்ணில் தெரிகிறது.

” பலருக்கும் கீட்டோ உணவை பரிந்துரைக்கும் உட்டச்சத்து நிபுணர் இல்லை. 

மேலும் பலர் வீட்டு மருத்துவம் போன்று இந்த உணவைப் பின்பற்றுகிறார்கள். 

ஆனால் எந்தவொரு உணவுத் திட்டத்தையோ, உணவையோ கடைப்பிடிக்கும் முன்பு, ஒரு நிபுணரிடம் கேட்பது முக்கியம். அவர்களின் கண்காணிப்பின் கீழ்தான் இத்தகைய டயட்டுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஏனென்றால் இதுபோன்ற உணவுகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று டாக்டர் ஷிகா ஷர்மா கூறுகிறார்.

உடலில் கீட்டோ டயட்டின் விளைவு

“வழக்கமாக, ஒரு நாளில் உடலுக்கு 20 கிராம் கொழுப்பு சத்தும், ஒரு கிலோ உடல் எடைக்கு ஒரு கிராம் புரதமும் தேவை. அதாவது நீங்கள் 55 முதல் 60 கிலோ வரை இருந்தால், 60 கிராம் புரதம் எடுத்துக்கொள்ளவேண்டும். 50 முதல் 60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டுகள். தேவைப்படுகிறது. 

ஆனால் இது உங்கள் உடல், உங்கள் வேலை மற்றும் செயல்பாடுகளுக்கு ஏற்ப, கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். விளையாட்டு வீரருக்கு இது அதிகமாக தேவைப்படலாம்.

உங்கள் உடலுக்கு 20 கிராம் கொழுப்பு மட்டுமே தேவைப்படும்போது அதை 60-80 சதவிகிதமாக நீங்கள் அதிகரிக்கும்போது, அது உங்கள் கல்லீரல் மற்றும் பித்தப்பை மீது பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று டாக்டர் ஷிகா சர்மா தெரிவிக்கிறார்.

#keto diet #kito diet #healthy benefits

#in4net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader