IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ரகசிய காதலனால் வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண் கைது

Get real time updates directly on you device, subscribe now.

காதலனால் கர்ப்பமான இளம்பெண்ணுக்கு வீட்டிலுள்ள கழிவறையில் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை புதைக்க நண்பரிடம் உதவி கேட்டதன் மூலம் போலீசில் சிக்கினார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் முடுக்காஞ்சேரி பாத்திக்குடியைச் சேர்ந்த இளம்பெண் (வயது 24) ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கட்டப்பனையில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் வேலை பார்த்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரின் பழக்கம் நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகியதால் அப்பெண் கர்ப்பம் ஆனார்.

பின்னர் அந்த வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துவிட்டது. இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமான விஷயத்தை காதலனிடம் கூறியுள்ளார். இந்த விஷயம் கேட்டு அதிர்ச்சி அடைந்த வாலிபன் , அந்த பெண் போலீசில் புகார் செய்துவிட்டால் தன் மேல் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு பயந்துபோய் தூக்குப்போட்டுக் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அந்த பெண்ணிற்கு நேற்று முன்தினம் மாலையில் வீட்டிலுள்ள கழிவறையில் பெண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை இறந்தே பிறந்தாக கூறினர். உடனடியாக அந்த குழந்தையை தன் செல்போனில் படம் எடுத்து நண்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். பின்பு அந்த குழந்தையை புதைப்பதற்கு உதவி கேட்டு நண்பரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் போலீசாரும் நண்பனும் பாத்திக்குடியில் உள்ள இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அந்த பெண்ணிடம் போலீஸ்சார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த இளம்பெண் தன் காதலனால் கர்ப்பம் ஆனதையும் , குழந்தை இறந்தே பிறந்தாகவும் கூறினார். தன் வீட்டில் யாருக்கும் தெரியாத படி ஒரு கட்டைப்பையில் அந்த குழந்தையை போட்டு மறைத்து வைத்து இருந்தாக அந்தப்பெண் கூறினார். மறைத்து வைத்திருந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீஸ்சார் பிரேத பரிசோதணைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இச்சம்பவம் குறித்து போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை கைது செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனையில் முடிவுக்கு பின்னர் அந்த குழந்தை இறந்து பிறந்தா? அல்லது கொல்லப் பட்டதா? என்று தெரிய வரும் என போலீஸார் கூறினார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader