IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பெண்கள் முன்னேற்ற பாதுகாப்பிற்காக கேரளாவில் புல்லட் விழிப்புணர்வு

110


கேரள மாநிலம் தோற்றுவிக்கப்பட்ட நாளை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக கேரள மாநிலம் கொச்சியில் பெண்கள் புல்லட்டில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியை கொச்சின் ஷிப்யார்டு, யாசோரம் பில்டர்ஸ், இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ளன.

பெண்களுக்கான அதிகாரம் மற்றும் முன்னேற்றம், பாதுகாப்பு போன்றவற்றை நிலைநிறுத்தும் விதமாகவும், அதை வெளியுலகிற்கு கொண்டு வருவதற்காகவும் மங்கை மாமாங்கம் என்ற பெயரில் 30ற்கும் மேற்பட்ட பெண்கள் சேலை உடுத்தி ராயல் என்ஃபீல்டு புல்லட் வண்டியை ஓட்டிக்கொண்டு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த பேரணி கொச்சியின் வைட்டிலா பகுதியில் இருந்து ரவிபுரம் வரையில் சுமார் 20 கீ.மீட்டார் தொலைவிற்கு நடைபெற்றது. கனரக வாகனமான புல்லட்டை பெண்கள் சேலை உடுத்தி ஓட்டிக் கொண்டு சென்ற கேரள மாநிலத்தில் பெரிதும் பேசப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சிங்கப்பெண்ணே என அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.
#Kerala #Women #Motorcyclists #BulletRide #In4Net