IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முகாமிட்ட மருத்துவ குழுவினரை இருமி இருமி விரட்டியடித்த கிராம மக்கள்

Get real time updates directly on you device, subscribe now.

கேரளாவில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழலில், கொரோனா இல்லை என்பதை நம்ப மறுத்த கிராம மக்கள் இருமி, இருமி மருத்துவ குழுவினரை விரட்டியடித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளா. ஆனால் அந்த மாநிலத்தில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நோய்த் தொற்று பரவிய போதும் முன்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கேரளாவைத் தொடர்ந்து நோய் கண்டறியப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிராவில் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் சமீபத்தில் கேரளாவிலும் நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கேரளா தலைநகரம் திருவனந்தபுரத்தில் நோயின் தாக்கம் கடுமையாக உயர்வதாக தகவல்கள் வெளியாகின. உடனே மருத்துவ குழுவினரை அனுப்பி திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக பூன்துரா என்ற கிராமத்திற்கு மருத்துவக் குழு ஆய்வுக்காகச் சென்றுள்ளது. அப்போது, ஆய்வுக்கு காரில் வந்த குழுவை எதிர்த்துக் கோஷமிட்ட கிராம மக்கள் வழிமறித்து கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். சுமார் நூற்றுக்கணக்காணோர் கூடி மருத்துவர்களை உள்ளே செல்ல வழிமறுத்தனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி கொரோனா என்பது ஒன்றுமில்லை, நீங்கள் பொய் சொல்கீறிர்கள். எங்கள் கிராமங்களுக்கு சிகிச்சை அளித்தது போதும். வெளியே செல்லுங்கள் என இருமி இருமி மருத்துவ குழுவினரை விரட்டி அடித்தனர்.

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற மருத்துவர்கள் நடந்த சம்பவத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து கொரோனா அச்சத்ததால் தங்களை ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அதன்பின் சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader