IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கொடூரமாக சித்திரவதை செய்து ஆசிரியரை கொன்று உடலை பீச்சில் வீசிய மர்மநபர்கள் யார் ?

353

 

ஆசிரியர் ஒருவரின் தலைமுடியை அறுத்து பீச்சில் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். மூன்று நாட்கள் கழித்து அழுகிய நிலையில் ஆசிரியரின் சடலத்தை போலீசார் கைபற்றியுள்ளனர்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் – ரூபஸ்ரீ. சந்திரசேகரன் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். ரூபஸ்ரீ ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ரூபஸ்ரீ வழக்கம் போல் தனது வண்டியில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் பள்ளி முடிந்ததும் தனது சொந்தகாரர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதனால் சந்திரசேகரன் மற்றும் உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் ரூபஸ்ரீயின் உடல் பிணமாக மஞ்சேஸ்வரம் பீச்சில் கிடந்தது. இதை பார்த்த மீனவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Related Posts
1 of 21

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரூபஸ்ரீயின் உடல் அழுகியநிலையில். தலைமுடி வெட்டப்பட்டும் இருந்தது. பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்களா என்றும் தெரியவில்லை.

ரூபஸ்ரீ 2 செல்போன்கள் வைத்துள்ளார். ஒரு செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மற்றொரு செல்போன் ரிங் போனது ஆனால் யாரும் எடுக்கவில்லை. அதனால் அந்த செல்போன் டவரை வைத்து அந்த இடத்தை கண்டுபிடித்தனர். அந்த செல்போன் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் காட்டியது. அந்த செல்போன் கிடைத்தால்தான் ரூபஸ்ரீயை கொன்றது யார், எதற்காக கொலை செய்துள்ளனர் என்று தெரிய வரும். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

#kerala #teacher #ruppa #murder