IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி வங்கிக்கணக்கில் திருடும் ஹேக்கர்கள்! அதிர்ச்சித் தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் அதிகளவில் சைபர் தாக்குதல் நடைபெற்றதாகவும், அதில் அதிகம் பாதித்துள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருப்பதாக இணைய பாதுகாப்பு நிறுவனமான கே 7 தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை மையப்படுத்தி தொடர்புடைய மாநிலங்களை குறிவைத்து, பயனர்களின் தகவல்களை திருடுவதை நோக்கமாக கொண்டு தாக்குதல் நடத்தியதாக கே 7 தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.

அதில் பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 வரை உலகெங்கிலும் தனிநபர் முதல் கார்ப்பரேட் மட்டத்தில் வேலை செய்பவர்கள் வரை பெரும்பாலானோரின் வங்கிக் கணக்குகள் திருடப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

பயனர்களின் ரகசிய தரவு, வங்கி விவரங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி கணக்குகளுக்கான அணுகலைப் பெற கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்களை வேவு பார்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த காலகட்டத்தில் காணப்பட்ட முக்கிய அச்சுறுத்தல்கள் ஆன்லைன் மோசடிகள் தான். கொரோனா தகவல் பயன்பாடுகளாக மாறுவேடமிட்டு, பயனர்களின் முக்கிய தரவுகளை குறிவைத்தன.

இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் ஆன்லைன் மோசடி அதிகம் காணப்பட்டன. அதே நேரத்தில் மெட்ரோ நகரங்கள் சிறப்பாக செயல்பட்டன. சிறிய நகரங்களில் 10,000 பயனர்களில், 250 க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

கேரளாவில், கோட்டயம், கண்ணூர், கொல்லம், மற்றும் கொச்சி போன்ற பிராந்தியங்கள் முறையே 462, 374, 236, மற்றும் 147 தகவல் திருட்டுகள் நடைபெற்றுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 2,000 பேரின் வங்கிக் கணக்கு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் தெரியவருகிறது.

பஞ்சாப்பில் 207, தமிழகம் 184 பேரின் வங்கி கணக்கு விவரங்கள் திருடப்பட்டுள்ளது. பெரும்பாலும் இவர்களை அணுகும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தங்களை அதிநவீன பிரச்சாரவாதிகள் போல் கொரோனோ தொண்டு புரிய நிதி உதவி கேட்டு அழைப்பு விடுப்பதாக தெரிகிறது.

மோசடி செய்பவர்கள் அமெரிக்காவின் கருவூலத் துறை, உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பிரதிநிதிகள் போல் பேசி ஏமாற்றுகின்றனர்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader