IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கேரள முதல்வர் பாணியை பின்பற்றும் ரஜினிகாந்த்

80


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். இவர் பிறவிலேயே இரண்டு கைகளை இழந்த பிரணவ், தன்னம்பிக்கையால் பட்டப்படிப்பை முடித்த இவர், ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்குவார்.

இவர் சமீபத்தில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் கிடைத்த தொகையை கேரளப் பேரிடர் நிவாரணத்திற்காக தனது பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து கொடுத்தார். அப்போது பினராயி விஜயன், பிரணவ்வுடன் காலில் கைகுலுக்கி எடுத்த செல்பி நாடு முழுவதும் பிரபலமானது. இரண்டு கைகளை இழந்த ஒருவரின் காலைப்பிடித்து முதல்வர் கைகுலுக்கியது பெரும் வைரலானது.

அப்போது பிரணவ் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புவதாக கூறினார். இதையடுத்து பிரணவ்வை நேற்று சென்னையில் தனது இல்லத்தில் சந்தித்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் 5.30 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் ரஜினியை சந்தித்தார் பிரணவ். அப்போது ரஜினிக்காக தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பிரணவ் ரஜினியிடம் வழங்கினார்.

பின்னர் ரஜினிகாந்தும் பிரணவ்வுடன் செல்பி எடுத்துக் கொண்டார். முதல்வர் பிரணவ் காலில் கைகுலுக்கியது போல் ரஜினிகாந்தும் அதே மாதிரி பிரணவ்வுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். கேரள முதல்வர் செல்பி எடுத்த அதே பாணியை ரஜினிகாந்தும் பின்பற்றுவதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கேரள ஓவியர் பிரணவ் இதற்கு முன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SelfiePranav #Rajinikanth #In4Net